March 05, 2018

கண்டியிலிருந்து ஒரு, உருக்கமான பதிவு

இந்த நாளை 05.03.2018 கண்டியில் வாழும் முஸ்லிம் மக்களும், அரசியல் வாதிகளும்,  ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

இது ஏற்கனவே நன்கு திட்டமிட்டு சிறுபான்மையினரான எமக்கு நடாத்தப்பட்ட ஓர் அழிவும் அநியாயமாகும்.

பள்ளிவாசல்களையும், வீடுகளையும் தாக்கியும், சேதமாக்கியும் ஒரு சில இனவெறியர்கள் தங்களுக்குள்ளே வீர மகுடம் சூட்டிக்கொள்கிறார்கள்

இது எமக்கு தீராத மனச்சுமையையும், சொத்து இழப்புக்களையும் தந்திருக்குமே ஒழிய,  எமக்கு படிப்பினை தரும் பாடம் அல்ல. என்பதே நிதர்சனம்.

அழுதத்கம, கிந்தோட்ட தொடங்கி நாடு முழுவதும் வியாபித்திருக்கும் இது, அரசியல் காய் நகர்த்தலுக்கு பயன்படுவது மாத்திரமல்லாமல் இன வெறியை தீர்க்கும் பழி காடாக மாற்றப்பட்டிருப்பது தான் மிகவும் உச்சகட்ட வேதனை. எமது எதிர்கால சந்ததியின் வாழ்க்கையினை புரட்டிப்போடும் இந்த சம்பவங்கள் நாளை வரலாறு ஆகுமே தவிர  வாழ்வியலுக்கான நிரந்தர தீர்வு தரும் என்பது எட்டாக்கனியை போன்றது தான்.

இது நாம் வாழும் தேசம். எமக்கு இங்கு தரப்பட்டிருக்கும் சம உரிமைகளையும் எம்மால்  அனுபவிக்க முடியும்.

அன்பான சகோதரர்களே!!

நாம் கற்றது என்ன? இனி கற்க போவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? ஒவ்வொருவரும் 
உங்கள் மன சாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்.

1. இஸ்லாம் நிறைய சந்தர்ப்பங்களில் எமக்கு பொறுமையை கடைபிடிக்கச் சொல்கிறது.

2. அநியாயத்திற்கு துணைபோகக் கூடாது என்கிறது..

3. நீதி, நியாயத்தை கற்றுத்தந்திருக்கிறது.

4. எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு நல்ல நெறிமுறைகளை கற்றுத் தந்திருக்கிறது.

5. நாம் கோழைகள் இல்லை. பத்ரு யுத்தம் ஒன்றே இதற்கு நல்ல சான்று.

6. நாம் முஸ்லிம்கள் , அல்லாஹ்வை மாத்திரம் பயப்படக்கூடியவர்கள். நம்பிக்கை இழந்தவர்கள் அல்ல.

7. அரசியல்வாதிகள் எமது பலம் அல்ல. ஆன்மீகபலம் தான் எமது நிரந்தர பலம்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன??

1. இலங்கை ஜம்இயதுல் உலமா சபையை நம்புவதா?

2. இனிக்க இனிக்க பேசும் அரசியல் வாதிகளை நம்புவதா?

3. ஒவ்வோரு ஊர் நிருவாக சபையை நம்புவதா?

4. எம்மோடு ஒற்றுமையாய் இருக்கும் 90% பெரும்பான்மையினரை நம்புவதா?

அழுகின்ற ஒவ்வொரு உள்ளங்களையும் கேட்டு கொள்ளுங்கள், கேட்டு சொல்லுங்கள்.

மிகுந்த மனக்கவலையோடு இந்த பதிவினை இடுகின்றேன். யா அல்லாஹ்!! எமது முஸ்லீம் சமூகத்தை பாதுகாப்பாயாக!! அவர்களது மனச்சுமைகளை இறக்கி வைப்பாயாக!!! ஆமீன்

உங்களது தொழுகையோடு , எமது கண்டி, தெல்தெனிய, கும்புகந்தூர, ஹிஜ்ராபுர, கெங்கல்ல, திகன, பல்லேகெள முஸ்லிம் சகோதரர்களுக்கு அதிகமதிகம் துஆ செய்யுங்கள்.

 -mohamed nazai , katugastota, inigala-

3 கருத்துரைகள்:

We should address this issue with logics and rational minds. we should not get away with emotions. I know well that there is secret plot to make maximum damage to Muslim community. yet we should not generalise it to say all are bad.. 90% of them are good...consider our limits and limitations and be good examples...
our politicians do not know what takes place .from Dambulla up to now they are sleeping ..
first I blame all Muslim public who votes these Muslim political thugs.. They care only about their family and their money .. How on earth Rauf Hakeem get votes in kandy .. Kandy Muslim voted for him many times .. look at he does.. He is most selfish Muslim politicians .. All Muslim politicians are thieves.. Shame on them.. they do not care.. This is a lesson for Muslim moulviss, teachers,imams and all good people of community to educate Muslim public and tell them not to vote all these Haramis in MUslim community .. they destroyed muslim community .. No one else .. they are responsible.. for this

தலைவரே இன்னொரு point ஐ கூற மறந்துவிட்டீர்கள்.
இனிக்க இனிக்க இயக்கம்பேசும் இயக்கவாதிகளை நம்புவதா?
தயவு செய்து பொறுமை காக்கவேண்டும் என்று சொல்லி எங்கள் இளைஞர்களை கோழைகளாக்கும் பெரியவர்களின் கண்டத்தில் அரையுற்ற வேண்டாம்.
அதோடு அவர்கள் " இது சிங்கள நாடு என்று நாங்க பேசாம இருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.
அல் குர்ஆன்
9:38. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது
9:39. நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.

Here after we all Muslims try to support and vote to JVP. Definitely they will support us like this incident S happening period.

Post a Comment