Header Ads



புட்டின் வெற்றி, வாழ்த்துகிறார் மஹிந்த

ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டீனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி .பீ.மெதேரியிடம் ரஷ்ய ஜனாதிபதிக்கான தனது வாழ்த்தினை தெரிவித்துள்தோடு, புட்டினது வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்   மஹிந்த ராஜபக்ஷ  ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இம்முறை இடம்பெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் போட்டியிட்டவர்களில்  அதிகூடிய வாக்கு வீதத்தினைப் பெற்று புடின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புட்டின் 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.