Header Ads



இலங்கை முஸ்லீம்கள், என்ன செய்யவேண்டும்...?


“அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” என்றுதான் குர்ஆன் கூறுகிறது. நபிகளாரின் 12 வருட கால மக்கா தஃவா பணியில் திருப்பித் தாக்குவதை நாங்கள் காணவில்லை. அந்த முன்மாதிரியும் எங்களுக்கு இல்லை. முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் மக்கத்து முன்மாதிரியை கடைப்பிடிப்பதே மேலானது.

கண்டிக்கும், அம்பாறைக்கும் வெளியிலுள்ள முஸ்லீம்கள் பாதிப்புக்குள்ளான முஸ்லீம்களுக்கு துஆச் செய்வதோடு எப்படி உதவலாம் என்பதை சிந்திப்பதே இப்போதைய கடமையாகும்.

* முஸ்லீம் புத்திஜீவிகளும் அறிஞர்களும் கொள்கை வேறுபாடுகளை மறந்து இந்த கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் எப்படி தடுப்பது என்று ஆராயவேண்டும்.

* சட்டம் தன் கடமையை செய்ய முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

* வெளிநாடுகளிலிருக்கும் முகபுத்தக வீரர்கள் பலிதீர்க்கும் பதிவுகளை பதியாமல் மன்னிப்பு சம்பந்தமான பதிவுகளை பதியவேண்டும்.

இதுவே இப்போதைக்கு நமது கடமையாகும்.

-இஷாக் ஜுனைடீன்-

1 comment:

  1. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
    (அல்குர்ஆன் : 24:55)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.