Header Ads



மருதமுனையில் முஸ்லிம்கள் கைது, இராணுவ பொலிஸ் தாக்குதலில் பலர் காயம்

கண்டி, திகண, மடவல ஆகிய பிரதேசங்களில் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு, கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும், முஸ்;லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (06) மருதமுனையில் பூரண கர்த்தால், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்பன நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து, பொலிஸ் மற்றும் இராணுவத்தால் பலர் தாக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிகளும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டதுடன,; பலர் பொலிஸாரால் கைது செய்யப்படதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல்களுக்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர்.

2 comments:

  1. முஸ்லிம் சகோதரர்களே! உங்களுக்குத் தாழ்மையாக அறிவித்துக் கொள்வது என்ன வெனில், இன்றில் இருந்து 10 நா ளைக்கு அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ளது.இக்கால கட்டத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம்,கடையடைப்பு போன்ற எதிர்ப்புகளைக் காட்டுவது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே சட்டத்தை மீறுபவர்களுக்க எதிராக பொலிஸ் கைது செய்து சிறையிலடைப்பதுடன் வழக்கும் தொடர்வார்கள். எனவே பொறுமைகாத்து தங்கள் பணிகளில் நிதானத்துடனும் பொறுமையாகவும் இருந்து செயல்படுங்கள். பள்ளிவாயல் மட்டத்தில் இந்த பிரச்னை கலந்துரையாடப்பட்டு உலமாக்கள், படித்தவர்கள்,புத்திஜீவிகளின் வழிகாட்டுதலுடன் அடுத்த கட்ட நகர்வு பற்றிய உறுதியான முடிவுகள் எடுக்க ஒத்துழையுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

    ReplyDelete
  2. this 10 emergency law is for Muslims only so please avoid allthe protest

    ReplyDelete

Powered by Blogger.