Header Ads



முஸ்லிம் ச‌மூக‌ம் "கூழுக்கும் ஆசை, மீசிக்கும் ஆசை"

அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா ஐ நா ச‌பைக்கு போன‌தால் அவ‌ர் அங்கு அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌வே பேசுவார் என‌ சில‌ர் அவ‌ரை விம‌ர்சிக்கிறார்க‌ள். இங்குதான் முஸ்லிம் ச‌மூக‌த்தின் முட்டாள்த‌ன‌ம் மீண்டும் நிரூபிக்க‌ப்ப‌டுகிற‌து.

பைச‌ர் முஸ்த‌பா அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர். அவ‌ர் எதிர்க்க‌ட்சி உறுப்பின‌ர் அல்ல‌. அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர் ஐ நா சென்றால் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌வே பேச‌ வேண்டும். 

க‌ட‌ந்த‌ அர‌சில் ர‌வூப் ஹ‌க்கீமும் ஐ நா சென்று ம‌ஹிந்த‌ அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌வே செய‌ற்ப‌ட்டார். இத‌னை முஸ்லிம் ச‌மூக‌மும் ஏற்று அவ‌ர் க‌ட்சிக்கு ஓட்டும் போட்ட‌ன‌ர்.

அர‌சில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌வே பேசுவர் என்ப‌தை தெரிந்துள்ள‌ முஸ்லிம்க‌ள் என்ன‌ செய்ய‌ வேண்டும்? 

அர‌சை எதிர்த்து பேசும் முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளையும் ஆத‌ரிக்க‌ முன் வ‌ர‌ வேண்டும்.

த‌மிழ் ம‌க்க‌ளில் க‌ஜேந்திர‌ குமார் ஐ நா சென்று பேசுகின்றார். ஆனால் அவ‌ர் அர‌ச‌ அமைச்ச‌ர‌ல்ல‌. அதே வேளை அமைச்ச‌ர் சாமிநாத‌ன் சுய‌மாக‌ ஐ  நா சென்று த‌மிழ் ம‌க்க‌ளுக்காக‌ பேசுவாரா? மாட்டார். 

ஆக‌வே முஸ்லிம் ச‌மூக‌ம் கூழுக்கும் ஆசை மீசிக்கும் ஆசை என்றே இருக்கிற‌து. த‌ங்க‌ளுக்கு அமைச்ச‌ர்க‌ளும் வேண்டும். வீதி அபிவிருத்தி, கொந்த‌ராத்து, தொழில், விழாக்க‌ளில் பிர‌த‌ம‌ அதிதியாக‌ இருக்க‌ என‌ அமைச்ச‌ர்க‌ள் தேவை. அவ‌ர்க‌ள் அர‌சை எதிர்த்து ச‌ர்வ‌தேச‌த்தில் பேச‌வும் வேண்டும் என‌ எதிர் பார்க்கிற‌து.  

உண்மையில் ச‌மூக‌த்துக்கு த‌ம‌க்காக‌ அர‌சை எதிர்த்தும் பேச‌க்கூடியோர் தேவையாயின் அமைச்ச‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் பாட்டில் விட்டு விட்டு புதிய‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ரவு கொடுக்க‌ வேண்டும். அர‌சை எதிர்த்து பேசுப‌வ‌ர்க‌ளுக்குரிய‌ பொருளாதார‌ உத‌விக‌ளையும் மான‌சீக‌மான‌ ஆத‌ர‌வையும் கொடுத்து அவ‌ர்க‌ளை ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின் ப‌க்க‌ம் அனுப்ப‌ வேண்டும். இதை விடுத்து அர‌ச‌ அமைச்ச‌ர் முஸ்லிம்க‌ளுக்காக‌ ஐ நாவில் பேச‌ வேண்டும் என‌ எதிர் பார்ப்ப‌து வ‌டி க‌ட்டிய‌ முட்டாள்த‌ன‌மாகும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்

4 comments:

  1. Muslim community never ask My3 to give a Minister portfolio to Faizer. This is rubbish.

    ReplyDelete
  2. THESE ARE THE MUSLIM "MUNAAFIKK" POLITICIANS "THE MUSLIM VOICE" HAS BEEN TELLING THE SRI LANKA MUSLIM COMMUNITY ABOUT SINCE JUNE 2014. THIS FELLOW FAIZER MUSTHAPA WILL DO ANYTHING TO SELL THE DIGNITY AND RIGHTS OF THE SRI LANKA MUSLIM COMMUNITY TO GAIN PERSONAL BENEFITS FOR HIMSELF AND HIS FAMILY. HE HA GONE TO GENEVA TO SUPPORT THE MY3 CAMPAIGN AGAINST THE SRI LANKAN MUSLIMS WHO WERE STAGING A PROTEST IN FRONT OF THE HR HEADQUARTERS ASKING JUSTICE TO THE MUSLIMS AND TO EXPOSE THE ATROCITIES DONE IN DIGANA, MADAWAL AND KANDY. THIS IS HOW THESE FELLOWS ENTER PARLIAMENT THROUGH THE BACK DOOR. FAIZER MUSTHAPA IS ALREADY WORKING HIS WAY TO GET A PLACE IN THE NATIONAL LIST OF THE SLFP FROM MAITHRIPALA SIRISENA. THE MUSLIM COMMUNITY SHOULD CHASE THESE "MUNAAFIKKS" FROM THE POLITICAL AREANA IN THE FUTURE,Insha Allah.
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. We have already seen this happening in Sri Lanka. IT HAS NOW HAPPENED IN GENEVA and other capitals too, Alhamdulillah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. we don't won't any ministry. we won't only rights to live in this country.this is our country we are sir Lankan.

    ReplyDelete
  4. ஒருவேளை பைசர் UNP யில் இருந்திருந்தால் பொங்கோ பொங்கென்று பொங்கியிருந்திருப்பார் இந்த மெளவி. இவர் அரசியல் தரகர் வேலைக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார்

    ReplyDelete

Powered by Blogger.