Header Ads



"சமூக வலைத்தளம் பாவிப்போருக்கான எச்சரிக்கை"

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் அல்லது வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா கருத்து வெளியிட்டார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் தனியாக ஒரு பிரிவை அமைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இது ஒரு நாட்டின் பேச்சு கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் ஆகும்.அரசாங்கம் அரசாங்கம் போல நடந்துகொண்டால் நேர்மையுடன் அனைவருக்கும் ஒரே சட்டமென்று அப்போது எந்த பிரச்சினையும் யாருக்கும் வராது.ஐரோப்பாவில் பாருங்கள் அங்கே யாரும் சட்டம் கையில் எடுத்து ஒருகாரியமும் செய்ய முடியாது அப்படி செய்தால் காவல்துறை தான் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் எங்கள் நாட்டில் காவல் துறை செய்யவேண்டிய கடமைகள் எல்லாம் புத்தமத போதகர்கள் தானே செய்யப்பார்க்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.