March 13, 2018

"சமூக நலனுக்காக கட்சியினை முன்னெடுத்துச்செல்ல, சகலரும் ஒன்றிணைய வேண்டும்"

-Riyath ABDUL MAJEED-

கண்டி இன வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் குரலெழுப்பிய பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மு.காவின் ஒரு தரப்பு முனைந்ததை கண்டிப்பதாக சமாதானம்,கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான அமையம் (ஒபேக்) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதி அமைச்சர் ஹரீஸ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுகின்ற ஒரு அரசியல் தலைமை என்பதை இன்று நாடறியும். இருந்த போதும் சிலரின் காழ்ப்புணர்ச்சியின் செயற்பாட்டினால் அவருக்கெதிராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தலைமையிலான ஒருசில உயர்பீட உறுப்பினர்கள் செயற்பட்டமை முழு முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதுடன் இன்று இவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் விடிவிக்காகவும் உருவாக்கிய கட்சி இன்று முஸ்லிம்களின் உரிமைக்காகவும் விடிவிக்காகவும் பாராளுமன்றில் பேசியதற்காக பாராளுமன்ற உறுப்பினருக்கே ஒழுக்காற்று நடவடிக்கை என்றால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்கு நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி எழுவதுடன் இக்கட்சி சுயநலவாதிகளின் கூடாரமாக மாறிவருகின்றதா என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது பாராளுமன்ற உரையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை நல்லாட்சி அரசு தடுக்க தவறியுள்ளது. பாராளுமன்றில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமருக்கு எதிராக  வாக்களிக்க நேரிடலாம் என மிகக் காட்டமாக கூறியிருந்தார். பிரதி அமைச்சரின் இந்த உரைக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற நகர்வு பிரதமருக்கு கட்சியிலுள்ளவர்கள் சிலர் தங்களது விசுவாசத்தை காட்ட முற்பட்டுள்ளனரா என்ற பலத்த சந்தேகம்; எழாமலில்லை.

முஸ்லிம் சமூகத்திற்காக ஒலிக்கின்ற குரல்களை திறைமறைவில் இருந்து நம்மவர்களைக் கொண்டு நசுக்கின்ற வழிவகைகளை இன்று டயஸ்போரா போன்ற இயக்கங்கள் மேற்கொண்டு வருகின்றது. இந்த வலையில் கட்சியின் செயலாளர் சிக்குண்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே சமூகத்தின் நலனுக்காக கட்சியினை முன்னெடுத்துச் செல்ல சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கருத்துரைகள்:

Harees is the one & only leader who deserves to claim himself as a SLMC MP.
The rest are morons or stooges of UNP

Well done Mr Harees
We are with you
Keep it up
YOUR Boss TALK only nothing in ACTION

சந்தேகம் என்ன அதுதான் உண்மை. இன்று ஹக்கீம் கம்பனி எங்கள் முஸ்லிம் சமூகத்தின் சொத்தான முஸ்லிம் காங்கிரசை டயஸ்போராவிட்கு விற்று விட்டனர்

This comment has been removed by the author.

ரவூப் ஹக்கீமை யாரும் மிஞ்சங்கூடாது, அவ்வாறு மிஞ்சினால் அவர்களை கட்சியிலிருந்து ஓரம் கட்டுவது, அதுக்கும் அவர்கள் அடங்கவில்லையென்றால் வெளியில் தூக்கிப்போடுவதுதான் எங்கள் SLMCயின் வழமையான விளையாட்டாக இருக்கின்றது. இதட்காகத்தான் கௌரவ ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அத்தாவுல்லா, பஷீர் ஷேக் தாவூத், அமீர் அலி, ஹசன் அலி இதுபோன்ற பல போராளிகள் முஸ்லிம்களுக்கன உருவாக்கப்பட்ட கட்சிலிருந்து விரட்டப்பட்டார்கள். கௌர ஹரீஸ் அவர்களுக்கும் இதுதான் நடக்கபோகிறது . இங்கு சமூகத்தைப் பற்றி பேசினால், முஸ்லிம்களுக்கன குரல் கொடுத்தால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள்.ஏனனில் எங்களது SLMC முஸ்லிம்களுக்கோ, சமுகத்துக்கோ அல்ல. மாறாக அது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை சந்தோஷப்படுத்தவும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கவும்தான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு எமது சமூகம் பலகட்சிகளாக பிரிந்திருக்க காரணம் இந்த பாழாப்போன சாணக்யமும் அதன் பினாமிகளும்தான்.இதில் சாணக்கியம் எதை சொன்னாலும் தலையாட்டி பொம்மைகள் போட்டி போட்டுகொண்டே முதலில் யாரு கையை ஒசத்துவதேகன்றே ரெடியாக இருக்கிறார்கள். பாவம் அப்பாவி ஜனங்கள்.

கௌரவ ஹரீஸ் அவர்களே!, தயங்கவேண்டாம் சமூகத்துக்காக, முஸ்லிம்களுக்காக உங்கள் குரல் ஒலிக்கட்டும், பலனை நீங்கள் எதிர்பார்க்கா வண்ணம் உங்களது கடமையைச் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் எல்லா திசைகளிருந்தும் அல்லாஹ் உங்களுக்குத் தருவான்.

Post a Comment