March 02, 2018

பொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி

-சுஐப் எம்.காசிம்-

அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை (02) கொழும்பு திரும்பிய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது சமூகத்துக்கு அம்பாறையில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசுவதற்கு அவசரமாக நேரம் ஒதுக்கித் தருமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பின்னரே, இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார். 

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.

“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சுட்டிக்காட்டினார் 

நேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் மூவரும் வலியுறுத்தினர். 

இந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் நாளை மாலை 03 ஆம் திகதி 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.     

7 கருத்துரைகள்:

அம்பாறை போலீஸ் மட்டும் இல்லை, இலங்கையிலுள்ள எல்லா போலீசும், பாதுகாப்பு படையும் இனரீதியாகவே செயட்படுகிறது. இது நிட்சயம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அப்படி இனரீதியாக செயட்படும் எந்த போலீசும், பாதுகாப்பு படையும் அதி கூடிய தண்டனையும், அவர்கள் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். புத்த குருமாருக்கும் சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும். இந்த விடயம் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப்பட்டு அது பாரிய அழுத்தமாக அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு துறைக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தை மக்களை வீதியில் இறக்கி தங்களது கண்டனத்தை தெரிவிக்கவும் தயக்கம் காட்ட கூடாது. இப்படியான ஒரு எச்சரிக்கை முஸ்லீம் அரசியல் வாதிகளிடம் இருந்து அரசாங்கத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் எடுத்துக் கூறப்பட வேண்டும். சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் முஸ்லிம்களின் உரிமைகள் மறக்கடிக்கப்படவோ, மழுங்கடிக்கப்படவோ முடியாது. இந்த நாட்டில் எதிர் கட்சி ஆசனத்தில் எந்த ஒரு முஸ்லீம் எம் பி யும் இல்லை. இது இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தின் மிகவும் பலகீனமான களநிலவரத்தையே சுட்டிக்காட்டுகிறது. 90% வாக்காளர்கள் சலுகைகளையே ( அதட்கு மறு பெயர் சேவை ) எதிர் பார்க்கிறார்கள். சிலவிடயங்களை தமிழ் மக்களிடம் இருந்து இந்த வாக்காளர்கள் பாடம் கற்க வேண்டும்.

Drama, Drama, Yahapalanaya Drama...............

1st of all, muslim congress will get out from government, support to TNA then we will see, what will happen,

pirathamrukku thatpothulla pirachchinaiku enkaludiya awalam thunpam kashtam ellam piachchinaiya theriuma

Ansar Athambawa, It is one of the good move as well. Similar things carried out by Leader MHM.Asraf as well. Well Said

Ansar Athambawa, It is one of the good move as well. Similar things carried out by Leader MHM.Asraf as well. Well Said

Post a Comment