Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்காக, களத்தில் குதித்தது ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த கடும் போக்காளர்களால் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்முறையை கண்டித்துள்ள சுவிசர்லாந்தில் இயங்கும் ஐரோப்பிய இஸ்லாமிய நிலையம், இந்த குற்றங்களை புரிந்தவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு சர்வதேச அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் உடனடிக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 16 வருடங்களாக சுவிசர்லாந்தில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமானது  செயற்பட்டு வருகிறது

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, இஸ்லாமிய ஒத்துழைப்பு மன்றம்,  அரபு லீக், ஐ.நா. சிறுபான்மை விவகாரப் பிரிவு, சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மற்றும் பல சர்வதேச அமைப்புக்களிடமும்  ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கடிதம் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தமது முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதுடன், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.