Header Ads



சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும், இலங்கையின் பாதாள உலக தலைவன்

டுபாயில் இருந்தவாறு இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் வலையமைப்பை வழி நடாத்துவதாக கூறபப்டும் பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ்  சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

இந் நிலையில் இந்த அரசியல்  புகலிட கோரிக்கை தொடர்பில் கடந்த ஒரு மாதகாலமாக மதூஷ், தேவையான ஆவணங்களை தயார் செய்து குறிப்பிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்பு புலனயவுத் துறை விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 தனது சகோதரன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாகவும், இலங்கை பொலிஸார் தன்னையும் கொலை செய்ய முயற்சிக்கும் போதே தான் நாட்டை விட்டு தப்பி வந்ததாகவும் கூறியும், பொலிஸார் தனக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவை எனவும் சுட்டிக்கடடியே மாகந்துரே மதூஷ் இந்த புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

 எவ்வாறாயினும் இலங்கையில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் மாகந்துரே மதூஷ் பின்னணியில் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நீல அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த நீல அறிவித்தல் ஊடாக மதூஷை கைது செய்வதில் சிக்கல் நிலவும் நிலையில் அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் ஒன்றினைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதாள உலக ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு  நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள  பொலிஸ் அதிரடிப் படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்தார்.

இதனிடையே பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் சிறப்பு பொலிஸ் குழுவும், அதன் புலனயவுப் பிரிவும் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், டுபாயில் தங்கியிருப்பதாக நம்பப்பட்ட மதூஷ் இத்தாலிக்கு தப்பிச் சென்ருள்ளதாக கண்டறிந்துள்ளனர். 

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மதூஷின் நடமாட்டம் அவதனைக்கப்ப்ட்டுள்ளதாக தகவல் உள்ள நிலையில் ,  புதுக்கடை வர்த்தகர் ரிஸ்வானின் கொலையின் பின்னர் அதற்கு பழி தீர்க்க மதூஷ் முன்னெடுத்ததாக கூறப்படும் நடவடிக்கை தொடர்பில் முன்னெடுக்கும் விஒசாரணைகளிலேயே மதூஷ் இத்தலையில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக, வர்த்தகர் றிஸ்வானின் கொலைக்கு பழி தீர்க்க பாதாள உலக உறுப்பினரான அகொஸ் மல்லியின் தலை வெட்டப்பட்டு புதுக்கடையில் போடப்பட்டிருந்தது. இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக மாகந்துரே மதூஷ் லொக்கு அய்யா எனும் பாதாள உலக உறுப்பினருக்கு தொலைபேசியில் உரையாடி தேவையான ஆலோசனைகளை வழங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படியே மாகந்துரே மதூஷ் கொஸ்மல்லி கொலை செய்யப்படும்  போதும் இத்தாலியில் தங்கியிருந்தமைக்கான தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

 இந் நிலையில் மதூஷை கைதுசெய்ய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் இணைந்து பாரிய முன்னெடுப்புக்களை முன்னெடுத்துள்ளன.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.