Header Ads



பொறுமையுடனும், அமைதியாகவும் இருக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்தும் வரையில் பொறுமையுடனும் அமைதியாகவும் இருக்குமாறு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்சன குணவர்தனவின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று வெளியிட்டதன் மூலம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்...பாதாள உலகக்குழுக்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுக்கள் ஆகியனவற்றினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே மக்கள் அமைதியாகவும் மதிநுட்பமாகவும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

பாதாள உலகக்குழுக்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளினால் சில பிரதேசங்களின் அமைதிக்கு சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

ஊடகங்களில் குறிப்பிடப்படுவதனைப் போன்று சட்டம் ஒழுங்கு நிலைமைகள் சீர்குலையவில்லை.

நாட்டில் இடம்பெற்று வரும் சில பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தந்திரோபாயமான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த விடயம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.

புலனாய்வுப் பிரிவினை வலுப்படுத்தி அதன் ஊடாக குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.