Header Ads



மஹிந்தவின் சகாவின், இனவாதப் பேச்சு


சிறுபான்மை இன பிரதிநிதித்துவம் மட்டுப்படுத்தப்படும் வகையிலான தேர்தல் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பேராசிரியர் சுதந்த லியனகே வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் தேர்தல் முறை மறுசீரமைப்புக்கான குழுவின் தலைவராக செயற்பட்ட பேராசிரியர் சுதந்த லியனகே இது தொடர்பாக வார இறுதி ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், 

தற்போதைய தேர்தல் முறையானது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவம் அநாவசியமான முறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே ​நேரம் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வேண்டும். சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல்களில் பெறும் ஆசனங்கள் காரணமாகவே தற்போதைய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஒன்றின் போது 12.5 வீத வாக்குகளுக்கு மேல் எடுக்கும் கட்சிகளுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுண தௌிவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நடந்தது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்திருப்பின் பொதுஜன பெரமுணவே ஆட்சியமைத்திருக்கும். எனவே இப்போதைக்கு அவர்கள் கோருவதைப் போன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொதுஜன பெரமுணவுக்கு வழங்குவதே சிறந்தது.

மறுபுறத்தில் சட்டச்சிக்கல்கள் தடையாக இருந்தால் புதிய சட்டங்களை இயற்றியாவது அதனை நிறைவேற்ற வேண்டும். அதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொதுஜன பெரமுணவுக்கு வழங்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயம் தடையாக இருப்பின் அவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. May be politically promoted professor. because, a cultured professor doesn't approach alike...

    ReplyDelete

Powered by Blogger.