Header Ads



"வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

வைபர் மீதான தடை நீக்கப்பட்டு அது மீண்டும் செயற்படுவது நல்லது. இந்த நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முழுமையாக விரைவில் மீள இயங்கச் செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன இலங்கையின் வெற்றிகரமான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.