Header Ads



குற்றவளிகளை தப்பவைக்க முயற்சி - விமலவீர Mp களத்தில் குதிப்பு


-மொஹமட் அன்ஸிர்-

அம்பாறையில் பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் முஸ்லிம் கடைகளை தீ மூட்டியமை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை தப்பிக்கச்செய்ய, பல தரப்புகள் முயன்று வருவதாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி முஹைமீன் காலித் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

அத்துடன் தப்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதை தடுக்கவும், அடையாளம் காணப்பட்டுள்ள பௌத்தசிங்கள இனவாதிகளை கைது செய்வதை  நிறுத்தவும் முஸ்லிம் சட்டத்தரணிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் பிரமுகர்கள் என பலருடனும் தொடர்புகொண்டு முயற்சிகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

மேலும் வன்முறையாளர்களினால் சேதமாக்கப்பட்டவற்றை துரிதமாக அகற்றவும் சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காது, அவர்களை எப்படியேனும் பிணையில் விடுதலை செய்ய, அத்தனை முயற்சிகளையும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஸ அணியின் தீவிர ஆதரவாளருமான விமலவீர திசாநாயக்கா  மேற்கொண்டுள்ளதாக அறியவருகிறது.

அம்பாறை வன்முறை விவகாரத்தில்அமைச்சர் தயா கமகே காண்பிக்காத ஆர்வத்தை, பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்கா மேற்கொள்வதாகவும், பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் அவரது ஆதரவாளர்கள் தொடர்புபட்டுள்ளமை இதன்மூலம் வெளிச்சமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாக சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதை தடுக்கவும், அமையாளம் காணப்பட்டவர்களை  கைது செய்வதை நிறுத்தவும் விமலவீர  திசாநாயக்கா அத்தனை முயற்சிகளையும் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளார். குறைந்தபட்சம் சமாதான இணக்கப்பாட்டுடன்  இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள அவர் ஆர்வத்துடன் செயற்படுவதாகவும், இதற்கு ஆதரவாக அம்பாறை பௌத்தபிக்குகள் களத்தில் குதித்திருப்பதாகவும் மேலும் அறியவருகிறது


1 comment:

  1. power iruppathu arasangaththin kaiela mahindavin kaiela ithakkuda seiya mudiyavittal ivarkalin aatchi kelvikkuriye

    ReplyDelete

Powered by Blogger.