Header Ads



இவர்கள் எங்கே..? நாம் எங்கே..??


சில வாரங்கள் முன்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அதிகாலை கண்டி செல்ல நின்றிருந்த போது அந்த தம்பதிகளை கண்டேன். யாரையும் சட்டைசெய்யாமல் முஸல்லாவை விரித்து பஜ்ரை தொழுத காட்சியது. 

ஆன்ம பலத்தின் வெளிப்பாடு. இஸ்லாம் என்றால் என்ன என்று அப்போது தான் விளங்கியது எனக்கு. 

மற்றையவர் எனது ஊரில் 05 வேளையும் இமாம் ஜமாத்தை பிடிக்க 250 மீ்ட்டர் தூரத்தை தள்ளு வண்டி உதவியுடன் கடந்து விரையும் 80 வயதை தாண்டிய முதியவர். இவர்கள் எங்கே நாம் எங்கே...!

Roomy Abdul Azeez 


3 comments:

  1. இவர்களை உருவாக்கியது மிகப்பெரும் ஓர் ஆன்மீக அமைப்பு.அன்றொரு நாள் பிரயாணத்தில் கலேவெலையைச் சேர்ந்த MC ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் சொன்னார். இந்த நாட்டிலே சில முக்கியமான உலமாக்களோடு இராக் காலங்களில் தங்கிய போது அவர்கள் சுபஹ் தொழுகையை உரிய நேரத்திற்கு தொழுவது பற்றி அதிகம் அக்கறை எடுக்காத்தைக் கண்டேன். ஆனால் கொழும்பு மர்க்கசுக்கு வந்து பார்த்த போது தஹஜ்ஜத்தில் அதிக அழுகுரல்களைக் கண்டேன் என்றார். ஆம் இஸ்லாம் நடைமுறையில் வர அதற்கான ஆன்மீகப் பயிற்சி அவசியம்.

    ReplyDelete
  2. தாம் உறுதியாக நம்பும் ஒன்றுக்காக அர்ப்பணிப்போடு இயங்குபவர்களால்தான் இவ்வாறு நடந்துகொள்ள முடியும். இதே போல சமூகக் கடமைகளையும் அர்ப்பணிப்போடு புரிவார்களாயின் முழுமை பெறும்.

    ReplyDelete
  3. எவர் சுபஹு தொழுகையை ஜமாஅத்தாக தொழுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார் என்று நமது ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.