Header Ads



முஸ்லிம் பெயர்தாங்கிய பிரபாகரனிஸம், எமது ஷஹாதாவாகிப் போகுமா..?

முஸ்லிம்கள் மீதான இனவன்முறையில் அண்மைய கண்டி தாக்குதல்கள் வித்தியாசமானது. 03-04 நாட்கள் தொடரான தாக்குதல்கள். இதுவே முதன் முறை அல்லாவிடினும் இவை வித்தியாசமானவை. “ முஸ்லிம் 'சமூகம் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்பட்டதினால் நிலைமைகள் சரியாகின" இது எம்மை திருப்திப்படுத்திக் கொள்ள நாம் சொல்லும் உச்சாடனங்கள்.

இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் முஸ்லிம் டீன்ஏஜர்ஸ் பற்றியது. 12 முதல் 18 வயதினரது கண்டி கலவரங்கள் பற்றிய உளப்பதிவுகள் பற்றியது.

இந்த வயது குழுமத்தினர் வன்முறைகள் பற்றி அதிகம் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டார்கள். விலாவாரியாக தம் உணர்வுகளை வெளிப்படுத்தவும் மாட்டார்கள். சம்பவத்திற்கும் தமக்கும் சம்மந்தமே இல்லாதவர்கள் போல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் ஆழ் மனதில் இவை ரெஜிஸ்ட்ரியாகி நிற்கும்.

தங்களிற்கு சேதம் விளைவித்த எதிரிக்கு பதிலடி கொடுக்கவில்லையே..!, பழிவாங்க முடியவில்லையே..! போன்ற ஏக்கங்கள் இவர்களது அன்கொன்ஸஸ் மைன்டில் ஒடுக்கப்பட்ட உணர்வுகளாக மாறி காத்திருக்கும். இவர்களே மிக ஆபத்தானவர்கள்.

20 வயதை கடந்து 70 வயது வரை உள்ள நம்மில் பலரும் எமக்கு நடந்த அநிாயயங்களை பரஸ்பரம் உளக்குமுறள்களாக பகிந்து கொள்கிறோம். அது பற்றிய பல உண்மைகளை அப்டேட் செய்து கொள்கிறோம். ஒரு கட்டத்தில் அந்த உணர்வுகள் என்பன நிதானமான கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றன. ஆனால் டீனேஜர்ஸ் அப்படியல்ல.

காஸாவில் சூசைட் மிஷன்களை செய்ய முயன்று அவை செயற்படாமல் பெயிலியரான தாக்குதல்தாரிகளை இஸ்ரேல் கைது செய்து அவர்களிடம் புலன் விசாரணை செய்த போது அவர்களது பரும வயதில் IDF (Israeli Defense Forces) நடாத்திய கொடுமையான தாக்குதல்கள், பலவந்த சியோனிஸ்ட் குடியேற்றக்காரர்கள் நடாத்திய தாக்குதல்கள் என்பனவே அவர்களை பின்னாட்களில் தாக்குதல் இயற்திரங்களாக மாற்றின என்பது தெரிய வந்தது.

காஷ்மீரிலும் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை கண்களால் அண்ணாந்து பார்த்த சிறுவர்கள் தான் பின்னாட்களில் டோரா போராவை கடந்து பாகிஸ்தான் பயிற்ச்சிக்க சென்றவர்கள். அவர்கள் பின்னாட்களில் கைது செய்யப்பட்ட போது இந்திய புலனாய்வுத்துறை உய்த்தறிந்த உண்மையிது.

இங்கு மிக முக்கியமான ஒரு உண்மையை நாம் பார்க்க வேண்டும். “ இவர்களிற்கு மோட்டிவெஷன் தேவையில்லை. இவர்களை மூளைச்சலவை செய்ய தேவையில்லை. அவர்கள் வளர்ந்த பின் அதையொத்த ஒரு சம்பவம் நிகழும் போது அவர்களாகவே ஓட்டோ ரியெக்ஷன் மூட்டிற்கு வந்து விடுவார்கள். காரணம் பழைய சம்பவங்களினால் உருவான சப்கொன்ஸஸ் மைன்டின் உணர்வுகள் மூளையை நேரடியாகவே கட்டுப்பாட்டில் எடுப்பதாகும்”.

இவர்களிற்கு எந்த பிரய்ன்வொசும் தேவைப்படாது. இவர்களது மைன்ட் பெயின்ட் ஏற்கனவே பூசப்பட்ட ஒன்றாகும். இவர்களது இந்த உண்ர்வுகளை அடையாளம் காணுவது கடினம். ஏனென்றால் கலவர காலங்களில் இவர்கள் எதையுமே எக்ஸ்பிரஸ் பண்ணுவதில்லை. வளரும் போது இவர்களை எம்மால் சரியாக எடை போட முடியாது.

இப்போது புரியும் சியோனிஸ இராணுவம் ஏன் பலஸ்தீன குழந்தைகளை இலக்க வைக்கிறது என்று.
கண்டி கலவரங்களை நாம் மறந்நு போகலாம். புகைபிடித்த சுவர்களிற்கு வர்ணம் பூசி மீண்டும் ஒரு சடவாத வாழ்வை ஆரம்பிக்கலாம் ஆனால் இந்த மைன்ட் பெயின்டிங் செய்யப்பட்ட சமகால டீனெஜினரை மறந்தவர்களாக.

எதிர்கால இனமுரண்பாடுகள் ஆயுத வன்முறையாக மாறும் என்றால் அதன் பின்னால் இவர்களின் மூளைகள் தான் தொழிற்படுகின்றன என்பதனை அப்போதும் நாம் உணராமலே அந்த போரட்டங்களில் உள்வாங்க்பட்டிருப்போம்.

கண்டியின் டீனேஜ் சிறுவர்களின் உளத்தை ரீ-பலன்ஸிங் செய்வது என்பது காலத்தின் கட்டாயம். இல்லையெனின் முஸ்லிம் பெயர்தாங்கிய பிரபாகரனிஸம் தான் எமது ஷஹாதாவாகிப் போகும். தலைமைத்துவ வழிாகட்டடிலில் அது உருவானால் அல்ஹம்துலில்லாஹ். மாறாக வெற்றுணர்வுகளின் வேகமாக உருவானால் அது தவறானது மட்டுமல்ல பயங்கரமானதும் கூட.....

Roomy Abdul Azeez

No comments

Powered by Blogger.