Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறைகளின் பின்னணியில் சர்வதேச சக்திகள்


சட்­டத்­த­ரணி சர்ஜூன் ஜமால்தீன் எழு­திய ‘சாட்­சி­ய­மாகும் உயிர்கள்’ நூல் அறி­முக விழா கடந்த 04.07.2025 வெள்­ளிக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்றில் இடம்­பெற்­ற­போது அதில் கலந்து கொண்டு சமூக அரசியல் செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி நிகழ்த்­திய நூல் அறி­முக உரையின் தொகுப்பு:


“சாட்­சி­ய­மாகும் உயிர்கள்” – எனும் இந்த புத்­த­கத்தை வாசிப்­பது என்­பது மிகவும் இல­கு­வான காரி­ய­மல்ல. இரத்­தத்­தி­னதும் சதை­யி­னதும் வாடை இந்த புத்­த­கத்தின் ஒவ்­வொரு பக்­கங்­க­ளிலும் வீசு­கி­றது. 1990 களில் தாயின் கரு­வ­றைக்குள் இருந்து வளர்­கின்ற குழந்தை முதல், தொண்­ணூறு வயது முதிர்ந்­தவர் வரை கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஏன் கொலை செய்­யப்­ப­டு­கிறோம் என்ற காரணம் தெரி­யா­ம­லேயே கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த அநி­யா­யத்­தி­னதும், அக்­கி­ர­மத்­தி­னதும், கொடூ­ரத்­தி­னதும் சாட்­சி­யங்­களை பதிவு செய்து வைத்­தி­ருக்­கின்ற ஒரு நூல்.


உல­கத்­திலே மிகவும் வள­மிக்க ஒரு தேசத்தில் இறைவன் நம்மைப் பிறக்க வைத்­தி­ருக்­கிறான். இலங்கைத் தீவு அற்­பு­த­மான வளங்­களைக் கொண்ட ஒரு கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு நிலப்­ப­ரப்பு. ஆனால் இந்த நாட்­டி­னு­டைய வளங்­களை பயன்­ப­டுத்தி, ஒரு தாய் பெற்ற பிள்­ளை­க­ளாக, இந்த நாட்டில் வாழ்­கின்ற சிங்­கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ சகோ­த­ரர்கள் ஒரு­வரை ஒருவர் புரிந்­து­கொண்டு, ஏற்­றுக்­கொண்டு வாழ்­கின்ற சூழ்­நி­லை­யி­லி­ருந்து எங்­களைத் திசை திருப்பி சர்­வ­தேச சக்­திகள் தங்கள் நலன்­களை அடைந்­து­கொள்­வ­தற்கு திட்­டங்­களைத் தீட்டி வந்­துள்­ளன. இந்த நாட்டை எப்­பொ­ழு­துமே மோதல் கொண்ட ஒரு கொதி நிலையில் உள்ள நாடாக வைத்­துக்­கொள்ள வேண்டும் என்­பதில் மிகவும் குறி­யா­கவே அவர்கள் இருந்­தி­ருக்­கி­றார்கள்.


சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் வடக்­கிலும், கிழக்­கிலும் ஒரு­போதும் இணைந்­து­விடக் கூடாது என்­பதில் அந்த சர்­வ­தேச சக்­திகள் மிகக் குறி­யாக செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. அதற்­கான பல அத்­தாட்­சி­க­ளையும், சான்­று­க­ளையும் சர்ஜூன் ஜமால்தீன் இந்த புத்­த­கத்தில் மிகத் தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

1970களில் இந்த நாட்­டிலே தமிழ் சமூ­கத்தின் மீது சிங்­கள சமூ­கமும், சிங்­கள இன­வாத அர­சியல் சக்­தி­களும் மிகக் கடு­மை­யான அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கின்­றன. இதனால் தமிழ் இளை­ஞர்கள் தங்­க­ளது அர­சியல் தலை­மைத்­து­வங்­களின் சாத்­வீக வழி­மு­றை­களின் மீது நம்­பிக்கை இழந்து ஆயுதப் போராட்ட வழி­முறை மாத்­தி­ரம்தான் தீர்வு என்று கருதி ஆயு­தத்­திற்குள் செல்­கி­றார்கள்.


இப்­ப­டி­யான ஒரு சூழ­லிலே, கிழக்கில், குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில், முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் தமி­ழர்­க­ளு­ட­னான இணக்­கப்­பாட்டு அர­சி­யலை எப்­படிச் செய்ய முடியும் என்று சிந்­திக்­கி­றார்கள். அவர்­களும், “தமிழ் பேசும் மக்கள்” என்ற கோஷத்­துக்குள் வரு­கி­றார்கள். தலைவர் அஷ்ரப் அவர்­களும், தந்தை செல்­வா­வோடு இணைந்து ஒரு இணக்­கப்­பா­டான அர­சி­யலை செய்ய முடி­யுமா என்று களத்தில் இறங்கிச் செயற்­ப­டு­கின்றார். பல தேர்­தல்­களை எதிர்­கொள்­கி­றார்கள்.


ஆனால், சர்­வ­தேச அர­சியல் சக்­தி­க­ளிலும், சர்­வ­தேச அர­சியல் நிகழ்ச்சி நிர­லிலும் மிக கவ­ன­மாக இருந்­த­வர்கள், தமி­ழர்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் இணைவு என்­பது இந்த நாட்­டிலும், இந்தப் பிர­தே­சத்­திலும் தங்­க­ளது நலன்­க­ளுக்கு மிகவும் ஆபத்­தா­னது என்­பதை அன்றே கணித்­தி­ருந்­தார்கள். என­வேதான், தமிழ் ஆயுதக் குழுக்­களை மிக கவ­ன­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் திருப்­பு­கின்ற அந்தப் பணி­யிலே அவர்கள் வெற்றி அடைந்­தார்கள்.


இக் காலப்­ப­கு­தியில் அதா­வது 90களில் கொல்­லப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களின் சாட்­சி­ய­மா­கவே இந்த நூல் மாறி­யி­ருக்­கி­றது.


2009 இல் யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­டு­கி­றது. அதற்குப் பின்னர் இந்த நாட்­டிலே சமா­தா­ன­மான சூழல் உரு­வாகும் என்று நம்­பினோம். இருந்­தாலும் 2010 ஆம் ஆண்டே சிங்­களத் தீவி­ர­வாத சக்­திகள் மிகக் கடு­மை­யாக முஸ்­லிம்கள் மீது இன­வா­தத்தை கட்­ட­விழ்த்­து­விடத் தொடங்­கின. காலியில் பொது­ப­ல­சே­னாவின் காரி­யா­ல­யத்தை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு அதி­காரி திறந்து வைத்­த­போது, அடுத்த அலாரம் எங்­க­ளுக்கு அடித்­தது.


இந்த நாட்டில் மீண்டும் ஒரு முரண்­பாட்டை உரு­வாக்­கு­வ­தற்­காக சர்­வ­தேச சக்­திகள் களத்­தி­லி­றங்­கி­விட்­டன என்­பதைத் தெளி­வா­கவே நாங்கள் கண்டோம். அந்த சாட்­சி­யங்­களும் பதிவு செய்­யப்­பட வேண்­டிய சாட்­சி­யங்­க­ளா­கத்தான் மாறி­யி­ருக்­கின்­றன.

இறு­தி­யாக, ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முஸ்லிம் ஆயுதக் குழுக்­களை இலங்­கை­யிலே உரு­வாக்க முடி­யாது தோற்­றுப்­போ­ன­போ­துதான், கடும்­போக்கு மதத் தீவி­ர­வாதம் கொண்ட சில இலங்­கை­யர்­களை அடை­யாளம் கண்­டார்கள். அவர்­களை மூளைச் சலவை செய்­தார்கள். அவர்­க­ளுக்கு உள்­நாட்­டிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் வாய்ப்­பு­க­ளையும், வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தார்கள். அதன்­மூலம் ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலை நடாத்­து­வ­தற்­கான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்­குதல் இந்த நாட்டில் நடந்து முடிந்­த­போதும், நாம் பட்ட அவ­லங்­களை இங்கு நான் சொல்ல வேண்­டிய எந்தத் தேவையும் இல்லை. நாம் அத்­தனை பேரும் அந்த அவ­லங்­களை அனு­ப­வித்­தி­ருக்­கிறோம். பள்­ளி­வா­ச­லுக்குள் தொழு­வ­தற்­குக்­கூட பயந்து பயந்து தொழு­கின்ற நிலையை இந்த நாட்­டிலே வாழும் முஸ்­லிம்கள் அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்கள்.


அப்­ப­டி­யான ஒரு சூழலை இந்த சர்­வ­தேச நிகழ்ச்சி நிரல் கொண்டு வந்து நிறுத்­தி­யது. என­வேதான், நாம் இப்­போது எங்கு இருக்­கிறோம் என்று சிந்­திக்க வேண்­டிய ஒரு கடப்­பாடு நமக்கு இருக்­கி­றது. நிகழ்­வு­களை வெறும் நிகழ்­வு­க­ளா­கவே பார்த்­துக்­கொண்­டி­ருக்கப் போகி­றோமா? அல்­லது நிகழ்­வு­க­ளுக்குப் பின்னால் இருக்­கின்ற இந்த நிகழ்ச்சி நிர­லி­லி­ருந்து பாடம் படித்­துக்­கொண்டு, இந்த சர்­வ­தேச நிகழ்ச்சி நிர­லி­லி­ருந்தும், இந்த சக்­தி­க­ளு­டைய சூழ்ச்­சி­க­ளி­லி­ருந்தும் விடு­தலை பெற்ற ஒரு சமூ­க­மாக மாறு­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் என்ன வியூ­கத்தை வகுத்­தி­ருக்­கின்­றன என்­பதே நம்முன் உள்ள ஒரு முக்­கி­ய­மான கேள்வி.


இன்றும் செம்­ம­ணி­யிலே எலும்புக் கூடுகள் அடை­யாளம் காணப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. எதிர்­வ­ரு­கின்ற ஜூலை மாதம் பன்­னி­ரண்டாம் திக­தி­யோடு, குருக்கள் மட படு­கொலை இடம்­பெற்று 35 வரு­டங்கள் நிறை­வா­கின்­றன. ஆனால் அதைப் பற்றிப் பேசு­வ­தற்கு யாருக்கும் எந்தத் திரா­ணியும் கிடை­யாது. புனித ஹஜ் செய்து முடித்­து­விட்டு வந்த ஹாஜிகள் கடத்­தப்­பட்டு, குருக்கள் மடத்­திலே புதைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆனால் அவை­களைத் தோண்­டு­வ­தற்­கான எந்த முயற்­சி­களும் இல்லை. அவை­களைப் பற்­றிய சாட்­சி­யங்­களும் இந்த நூலில் விலா­வா­ரி­யாகப் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் சமூகம் இவ்­வா­றான நிகழ்­வு­க­ளி­லி­ருந்து பாடம் படித்­துக்­கொண்டு, முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான என்ன வேலைத் திட்­டங்­களை நாங்கள் கொண்­டி­ருக்­கிறோம்?


2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லுக்குப் பின்னர், இந்த நாட்­டிலே நாங்கள் வாழ முடி­யாது என்ற முடி­வுக்கு வந்து பலர் இந்த நாட்டை விட்டு ஓடி­னார்கள். கோட்­டா­பய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­ட­போது, மிக­வுமே ஒரு மன உளைச்­ச­லுக்குள் முஸ்லிம் சமூகம் தள்­ளப்­பட்­டது. “இந்த நாட்டில் இனியும் வாழ முடி­யுமா?” என்ற ஒரு நிலைக்கு வந்தோம். ஆனால், இந்த நாட்டின் மீது பற்­றுக்­கொண்டு இந்த நாட்டு மக்கள் ஒரு எழுச்­சியை செய்­தார்கள் என்று சொல்­வதில் எனக்கு இப்­போதும் உடன்­பா­டில்லை. இந்த நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி தங்­க­ளு­டைய வயிற்றைப் பாதித்­த­போ­துதான் தங்­க­ளு­டைய வயிற்றைப் பாது­காப்­ப­தற்­காக அவர்கள் போரா­டி­னார்கள்.


ஒரு ஒருங்­கி­ணைந்த வேலைத் திட்­டத்தை நோக்கி சிவில் சமூ­கங்­களும், முஸ்லிம் சமூ­கத்தின் பொது மக்­களும் அழுத்தம் கொடுக்­காது விட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லை­விட மிக மோச­மான நிலை­மை­க­ளுக்குச் செல்ல வேண்டி வரும் என்ற சமிக்ஞைகள் மக்­க­ளுக்குத் தெரிந்­து­கொண்­டுதான் இருக்­கி­றது. அந்த சமிக்ஞைகள் இன்னும் இல்­லாமல் போக­வில்லை. தற்­போது ஏற்­பட்­டி­ருப்­பது ஒரு தற்­கா­லி­க­மான ஓய்­வுதான்.

இங்கு ஃபாதர் ரொஹான் இருக்­கிறார். நானும் ஃபாதர் ரொஹானும் நீண்ட கால­மாக பௌத்த, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய சமயத் தலை­வர்­க­ளோடு இணைந்து பணி­யாற்றி வரு­கிறோம். ஒரு இரவு ஒரு பௌத்த சமயத் தலைவர் என்னை தொலை­பே­சியில் அழைத்து, “உங்­களை நான் அவ­ச­ர­மாக சந்­திக்க வேண்டும், கொழும்­புக்கு வர முடி­யுமா?” என்று கேட்டார். ஒரு சில தினங்­களில் அவரை கொழும்­பிலே சந்­தித்தேன். என்னை சந்­திக்க வந்­த­போது அவர் ஒரு குறிப்புப் புத்­தகம் (நோட்புக்) கொண்டு வந்­தி­ருந்தார். அந்த நோட்­புக்கை பார்த்து பார்த்து, அரபு வச­னங்­களைச் சொல்லிச் சொல்லி, “இதென்றால் என்ன? இதென்றால் என்ன? இப்­படி என்றால் என்ன?” என்று என்­னிடம் கேட்டார். ஒரு பௌத்த துறவி, அரபு வச­னங்­களை இவ்­வ­ளவு துல்­லி­ய­மாக எப்­படி கற்­றுக்­கொண்டார் என்று நான் ஆச்­ச­ரி­யப்­பட்டேன். நான் அவ­ரிடம் கேட்­ட­போது சொன்னார், “நீங்கள் என்னை இப்­போதே கேட்­கக்­கூ­டாது. இவை அத்­த­னைக்கும் விளக்கம் சொல்லி முடிந்த பின்னர் நான் உங்­க­ளுக்கு அதனைப் பற்றிச் சொல்­லுவேன்.” என்றார்.


நான் மிக பொறு­மை­யாக எல்­லா­வற்­றையும் அவ­ருக்குச் சொல்லி, இறு­தி­யாக ஒரு வார்த்­தையை கேட்டார். அதுதான் “அல்-­வலா வல்-­பரா” என்றால் என்ன? என்­பது. நான் அந்த வார்த்­தையை அரபு மொழியில் அதற்கு முன்னர் கேள்­விப்­பட்­டி­ருக்­க­வில்லை. நான் அரபு மொழியில் 7 வரு­டங்கள் கற்­றவன். எனினும் எனக்கு அந்த சொல் பற்­றிய, அந்த விடயம் பற்­றிய தெளிவு அப்­போ­தைக்கு இல்லை என்று அவ­ரிடம் சொன்னேன். “உண்­மை­யாக இது பற்றி எனக்குத் தெரி­யாது. எனக்கு கொஞ்சம் அவ­காசம் தாருங்கள். நான் என்­னை­விட இதிலே ஆழ­மான அறி­வுள்­ள­வர்­க­ளிடம் கேட்­டு­விட்டு, இதைச் சொல்­கிறேன்” என்றேன். இதை நான் ஒரு சிரேஷ்ட இஸ்­லா­மிய அறி­ஞ­ரிடம் போய்க் கேட்டேன். அவர் அதனை விளங்­கப்­ப­டுத்­து­கின்­ற­போது என்­னு­டைய உடல் நடுங்­கி­யது. இந்த துற­விக்கு இந்த விட­யத்தைச் சொல்லிக் கொடுத்­தது யார் என்று நான் ஆச்­ச­ரி­யப்­பட்டேன். பின்னர் நான் அந்த இஸ்­லா­மிய அறி­ஞ­ரையும் என்­னிடம் கேள்வி கேட்ட பௌத்த மத குரு­வையும் நேரில் சந்­திக்க வைத்தேன்.


நான் என்ன சொல்ல வரு­கிறேன் என்­பது உங்­க­ளுக்குப் புரியும் என நினைக்­கிறேன். மிகவும் கவ­ன­மாக திட்­ட­மிட்டு, மிக முக்­கி­ய­மான பல விட­யங்கள் பற்றி பௌத்த மத குருக்­க­ளுக்கு தவ­றான விளக்கம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அரபு மத­ர­சாக்­களில், அரபுக் கல்­லூ­ரி­களில், இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்­களில், பள்­ளி­வா­சல்­களில் இத­னைத்தான் போதிக்­கி­றார்கள் என்று அவர்­க­ளுக்குச் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. “அல்-­வலா வல்-­பரா” என்றால், முஸ்­லிம்கள் மீது இரக்கம் காட்­டு­வதும், காபிர்கள் மீது கடு­மை­யாக நடந்­து­கொள்­வதும் என்ற ஒரு கோட்­பாடு. இது ஒரு பெரிய கோட்­பாடு, இது ஒரு பெரிய சிந்­தனை. இது அல் கைதா­வு­டைய தலை­வர்கள் பேசிய மிக முக்­கி­ய­மான ஒரு கோட்­பாடு. அது இங்­குள்ள பிற தலை­வர்­க­ளுக்கு படிப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதனை வைத்துக் கொண்டு அவர்கள் எங்­களை தவ­றாகப் பார்க்­கி­றார்கள், எம்மை பயத்­தோடு பார்க்­கி­றார்கள், ‘இலங்கை முஸ்­லிம்கள் இந்த விட­யங்­க­ளை­யெல்லாம் மத்­ர­சாக்­களில் கற்­பிக்­கி­றார்கள்’ என்ற ஒரு கற்­பி­தத்­தோடு அவர்கள் இப்­போதும் இருக்­கி­றார்கள்.


இப்­போது இவர்­க­ளுக்கு உண்­மையைச் சொல்­லிக்­கொ­டுப்­பது யார்? சந்­தே­கங்­களைத் தீர்த்து வைப்­பது யார்? இதற்­கான சூழலை உரு­வாக்கும் பொறுப்பு யார் மீது இருக்­கி­றது? அதனைச் செய்­யா­விட்டால், சர்ஜூனைப் போன்ற ஒரு தம்பி, இன்னும் ஒரு 30 வரு­டத்­துக்குப் பின்னர் வந்து, “சாட்­சி­யாகிப் போன உயிர்­களின்” இரண்­டா­வது பாகத்தை நமது கைகளில் தந்து, இப்­படி ஒரு கூட்­டத்தை நடத்தி இங்கு நானும் நீங்­களும் பேசக் கேட்­டு­விட்டு இன்னும் ஒரு அவ­லத்­துக்கு இட­ம­ளிக்கப் போகி­றோமா? இல்லை, இந்த சாட்­சி­யங்­க­ளி­லி­ருந்து பாடம் படித்­துக்­கொண்டு, எதிர்­கால சந்­த­திக்கு அமை­தியும், சகிப்­புத்­தன்­மையும், ஒரு­வரை ஒரு­வர் புரிந்­து­கொண்டு, ஒரு­வரை ஒரு­வர் ஏற்­றுக்­கொண்டு, “உங்­க­ளு­டைய மதம் உங்­க­ளுக்­கு­ரி­யது, எங்­க­ளு­டைய மதம் எங்­க­ளுக்­கு­ரி­யது. ஆனால் நாங்கள் ஒரு­வரை ஒரு­வர் ஏற்­றுக்­கொண்டு, மதிப்­ப­ளித்து, இரக்கம் காட்டி வாழ்வோம்” என்ற ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்கப் போகி­றோமா? இந்த புத்­த­கத்தை வாசித்து முடிக்­கின்­ற­போது எனக்குள் எழுந்­தி கேள்வி இது. இது முத­லா­வது விடயம்.


இரண்­டா­வது விடயம், இந்தப் புத்­த­கத்தை எழு­து­வ­தற்கு சகோ­தரர் சர்ஜூன் சுமார் ஆறு வரு­டங்கள் தன்­னு­டைய காலத்தை, நேரத்தை செல­வ­ழித்­தி­ருக்­கிறார். இது ஒரு சாதா­ரண விடயம் அல்ல. இந்தப் புத்­த­கத்­திலே சுமார் முப்­பது பேரை அவர் நேர்­காணல் கண்­டி­ருக்­கிறார். சம்­பந்தன் ஐயா முதல், எரிக் சொல்ஹெய்ம் வரை அவர் இந்தப் புத்­த­கத்­திலே பல அர­சியல் தலை­வர்­களை நேர்காணல் செய்திருக்கிறார். இந்த நாட்டிலே பெயர் குறித்தும், பெயர் குறிக்கப்படாமலும், அடையாளப்படுத்தியும், அடையாளப்படுத்தாமலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான அத்தனை படுகொலைகளையும் இந்தப் புத்தகத்திலே அவர் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட பலருடைய சாட்சியங்கள், அவர்களுடைய வரலாறுகள் இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு சகோதரருடைய ரத்தமும், சதையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க இரத்த வாடை வீசுகின்ற ஒரு வரலாற்றின் சாட்சியம்.


ஆனால் இது இன்னும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி நமக்கும் இருக்கிறது. தமிழ் மக்கள் இன்று தமிழ் ஈழத்தில் நடந்த அத்­தனை படு­கொ­லை­க­ளையும், இணை­ய­தளம் வழி­யாக ஆங்­கி­லத்தில் ஆவ­ணப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் ஒரு பேப்பர் துண்­டி­லா­வது முஸ்லிம் சமூ­கத்தின் இழந்த நிலப்­ப­ரப்­புகள் பற்­றியோ எங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநி­யா­யங்­களைப் பற்றியோ எந்தவித ஆவணங்களும் நம்மிடம் இல்லை. ஆகக் குறைந்தது இவ்வாறு தொகுக்கப்பட்ட ஆவணங்களையாவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்தவர்கள் சர்வதேசமயப்படுத்தவும் ஆங்கில மொழியில் இணையத்தளங்கள் வாயிலாக உலகறியச் செய்யவும் முன்வர வேண்டும்.

- Vidivelli -

No comments

Powered by Blogger.