Header Ads



"வாய்ப்புகள் வந்தால், உன் பின்னால் நானும் வருவேன்...."


எனது வீட்டில்நெருப்பு
என்று நீ கதறிய கடைசி குரல்
எனது காதுகளில் இன்னும் ஒலிக்கின்றது

உன் முகத்தை முதல் முதலாக மைய்யத் என்ற பெயரை நீ தாங்கிய பின் தான் பார்த்தேன்
இருந்தாலும் என் உள்ளம் உன்னை நேசிக்கின்றது
நீ சுவர்கத்தின் முத்தென்பதாலோ என்னவோ....

உன் பிறப்பு ஒரு சம்பவம் தான் ஆனால் உன் இறப்பு ஒரு வரலாறை எழுதிவிட்டது
நீ உண்மையில் ஜெயித்துவிட்டாய் 

லண்டனில் ஆர்பாட்டமும் உன் இறப்பினால் தான்
அல் ஜெஸீராவில் வந்த செய்திகளும் உன் நெருப்பினால் தான்

உண்மையில் நீ ஒரு மெழுகுவர்திதான்
நீ உருகி உலகுக்கு வெளிச்சத்தை தந்து விட்டாய் 
உண்மையில் நீ ஒரு மெழுகுவர்தி தான்

உடமைகளுக்காய் உயிர் துறந்தவர் 
உயிர் தியாகிதான் , ஷஹீதானவர்தான்
எறிந்த வீட்டில் உன்னை வாழவைக்க விரும்பாத இறைவன் 
சுவன மாளிகைக்கு அழைத்து விட்டான் 

எறிகின்ற வீட்டினுள் சென்றது 
உன் கால்கள் அல்ல 
உன் வீரம்

சகோதரனை காப்பாற்றியது உன் கைகள் அல்ல 
உன் பாசம் உண்மையில் நீ ஜெயித்துவிட்டாய்

சுவனத்தில் உன்னுடன்     கை கோர்த்து நடைபோடும் குழந்தையாக இருக்க ஆசைப்படுகின்றேன் 
வாய்ப்புகள் வந்தால் உன் பின்னால் நானும் வருவேன்....
சுவனத்திற்கு... இன்ஷா அல்லாஹ்

இப்படிக்கு
உன் சகோதரி
SHAKIRA BINTH MOHIDEEN

4 comments:

  1. super poem Sister. Ever much emotional and meaningful. Inshallah. Allah reward him highest place in Paradise. His sacrifice will be historical not only for the Sri Lanka Muslim community but role model to the entire world. To die as a shaheed in like this not every one get that blessing.

    ReplyDelete
  2. will miss him forever. may Allah grant him in jannathul firdouse. Aameen

    ReplyDelete
  3. உண்மையாக இப்பதிவை படித்து விட்டு அழுது விட்டேன்.

    ReplyDelete

Powered by Blogger.