March 06, 2018

அநுரகுமாரவுக்கு, அஸ்ஸலாமு அழைக்கும்...!


நீங்கள் இன்று 06.03. பாராளுமன்றில் வழமையைப் போலவே மிகவும் தெளிவாக , அழகாக மட்டுமல்லாது , கொஞ்சம் உங்களுக்கே உரித்தான ஆவேசமும் கலந்து எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப் படுத்தும் விதத்தில் பேசினீர்கள் . 

மிக்க நன்றிகள் !

எங்கள் பள்ளிவாயல்களை , எங்கள் வீடுகளை , எங்கள் வியாபார நிலையங்களை ......... சுருக்கமாகச் சொன்னால் உயிர் , உடமைகள் எதனையும் கலகம் அடக்கும் போலீசும் , அதிரடிப்படையும் காப்பாற்றித்தர இயலாதவர்களாக இருக்கிறார்கள் . 

எங்கள் அரசியல் தலைவர்கள் அல்லாஹ்வுக்கு அடுத்ததாக அவர்களைத்தான் எங்கள் பாதுகாப்புக்காக அழைக்க முடியும் . 

ஆனால் அவர்கள் , அரசையும் மீறிய வேறு யாரோ ஒருவர் அல்லது ஒரு குழுவுடைய வழிகாட்டல்களிலோ , அல்லது எவருக்கோ பயந்த ஏதோ நிலையிலோ இருப்பதாக தோன்றுகிறது.
எங்கள்அரசியல் தலைவர்கள் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அடிபணிய விரும்பாதவர்கள்தான் ஆனாலும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நிலைமையை கையாளவேண்டிய கடப்பாடுடையவர்கள் .

எங்கள் இளைஞர்களும் உங்கள் இளைஞர்களை போலவே சிங்கங்கள்தான் . ஆனாலும் அவர்களும் சிந்தித்து , செயற்படவே விரும்புகிறார்கள் .

நாங்கள் மேலே உங்களுக்கான எனது சலாத்தில் சொன்னது போலவே சாந்தியையும் சமாதானத்தையும் விரும்புபவர்கள் .

எங்களை நாங்களே பாதுகாப்பதற்காக மட்டும் தற்பாதுகாப்பு அரண்களாக எங்கள் தலைவர்கள் இறங்கினாலும் ,  அல்லது தாமாகவே எங்கள் இளைஞர்கள் இறங்கினாலும் விபரீதமான நிலைமைகள் உருவாகலாம் . 

அதனாலேயே எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியாத பரிதாப நிலையில் உள்ளோம் . 
எங்களுக்காக அன்று அளுத்கமை , 

அடுத்து ஜிந்தோட்டை 

இன்று திகனை என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் மிகவும் தைரியமாக உரத்துப் பேசிய , பேசுகிற உங்களிடம் ஓர் உதவி வேண்டியே இதனை எழுதுகிறேன் .

உதவுவீர்கள் என்றும் நம்புகிறேன் .

அனர்த்தங்கள் நடக்கும் போது உடனடியாக களத்தில் இறக்க என்று உங்கள் கட்சியில் ஓர் இளைஞர் படையணி இருக்கிறதல்லவா .

தயவுசெய்து எங்கள் பள்ளிகளை , வீடுகளை , வியாபார நிலையங்களை பாதுகாத்துத் தரவும் ,குழப்பம் விளைவிக்கவென்றே வருகிற உங்கள் இன இளைஞர்களிடம் உண்மை நிலையை விளக்கி ஆசுவாசப்படுத்தி திருப்பி அனுப்பவும்,

உங்கள் படையை எங்கள் ஊர்களுக்கு மூன்று நாட்களுக்கு அனுப்பி உதவ முடியுமா ?

சீருடையுடனும் , ஆயுதம் தரித்தும் நிற்கிற அதிரடிப் படையினரை விடவும் ,

சீராக பேசி , சிறப்பாக உறவை வளர்க்க உங்கள் படையணியே இக்காலக் கட்டத்திற்கு பொருத்தமானது .

சிங்கள இளைஞர்கள் , சிங்க இளைஞர்களுடன் பேசி எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான வீண் தப்பபிப்பிராயங்களை இலகுவாகக் களையலாம் .

உங்கள் நல்ல பதிலுக்கும் , முன்னெடுப்புக்களுக்கும் இப்போதே நன்றி சொல்லி விடை பெறுகிறேன் .

மிக்க நன்றிகள் .

வஸ்ஸலாமு அழைக்க வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு .

நாளையே உங்கள படை எங்கள் பகுதிகளைப் பாதுகாக்கவும் , தப்பபிப்பிராயங்களை களையவும் 
புறப்படும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

அன்புடன் 

ரவுப் ஹஸீர் .

06.03.2018

4 கருத்துரைகள்:

Well said Mr Anura kumara

The JVP considers politics as a service to the people and all its members, from the leader to down, are dedicated to this cause. Other parties and their politicians consider politics as a business to make wealth.

Insha Allah Anura and JVP definitely help us.

Vekkam Rosha ketta Muslimkale. Neengal JVP yin Uthaviyayae Naduhireerhal. Neengal avarhalukku Vottu pooteerhala? UNP kku allikodutheerhal. Ippo Vangikkatu hereerhal. Namakku SLPP um UNPum ethir enral en JVP kku koduttu parthirukkalame?

Post a Comment