March 13, 2018

"குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், அதில் எந்த சமரசமும் வேண்டாம்"


கடந்த சில நாட்களாக இனவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஒரு சாராரும், தமது குடும்பம் சொத்துகளை பாதுகாக்க இன்னொரு சாராரும் என்று வீடுவாசல்களை துறந்து ஊர் எல்லைகளில் பசி தூக்கம் மறந்து பாடுபடுவதை கண்கூடாக பார்த்து வருகிறோம்,

பதற்றநிலை சற்று தணிந்தாலும் ஆங்காங்கே தீவைத்தலும் தாக்குதல்களும் நடைபெறாமலில்லை,
சிங்கள கிராமங்களால் சூழப்பட்டுள்ள நமது ஊர்கள் இன்னும் முற்றாக வழமைக்கு திரும்பாத அதே வேளை, இரு இனங்களின் மதத்தளங்கள் ஊடாக சமரச முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளன,

எமது சமூக தலைமைகள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்,

நடந்து முடிந்தது ஒன்றும் இரு இனங்களுக்கான மோதலோ, கலகமோ அல்ல..!

மாறாக இது முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறை, இங்கே பாதிக்கப்பட்டது நாம் மட்டுமே, உடமைகளை இழந்து மன உளைச்சளுக்கு ஆளானது முஸ்லிம்கள் மாத்திரமே!

அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்கலாம் வழங்காமல் போகலாம், எமது உறவுகளின் ஒத்தாசையோடு இழந்தவைகளை மறுசீரமைத்து கொடுக்கலாம், நமக்கு இழந்தவைகளை திருப்பி தருவதனால் நமக்கு நடந்த அட்டூழியம் இல்லையென்றாகி விடுமா?

கிடைக்கப்பெற்ற வீடியோ சாட்சிகளின்படி அனேகமான சேதங்களை உண்டாக்கியவர்கள் எமது அயலூர்களில் வசிக்கும் பெரும்பான்மை சிங்கள இளைஞர் யுவதிகளால்தான்! பல இடங்களில் பாடசாலை மாணவர்களால் எமது சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.

இப்போது அதே அயலூர் பன்சலை ஹாமுதுருமார், கிராமசேவையாளர், ஆசிரியர்கள் என பலர் சமாதான தூதுவர்களாக வருவார்கள், வருகிறார்கள்!

வரட்டும் அவர்களை மரியாதையாக உபசரிப்போம், அதுபோலவே இனிமேல் நடப்பவைகள் சம்பந்தமாக கருத்துப் பரிமாறிக்கொள்வோம்! பரவாயில்லை.

ஆனால் குற்றம்புரிந்தவர்கள் அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், 

“அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும், அந்த விடயத்தில் எந்த சமரசமும் வேண்டாம்.”

நாம், குறிப்பாக எமது மனைவி குழந்தைகள் உளரீதியாக பட்டபாட்டை மனதில் கொள்வோம்,

“அடடே இவர் நம்ம கஸ்டமராச்சே, நம்மளோட நெருங்கிப்பழகுற ஆளாச்சே! சரி விட்டுக்கொடுப்போமே!” என்றெல்லாம் முடிவெடுக்க அசரத்மார்களுக்கும் ஹாஜியார்மார்களுக்கும் இடமளிக்க வேண்டாம்!

இந்த செக்கன்வரை தூங்காமல் மனைவி குழந்தைகளை விட்டு விலகி ஊர்காக்கும் எமது உடன்பிறப்புகளின் கஷ்டங்களை விட்டுக்கொடுப்பு, ஹுதைபியா உடன்படிக்கை என்றெல்லாம் வியாக்கியானம் பேசி நீர்த்துப்போக விட வேண்டாம்!

பிறந்த மண்ணை விட்டு ஹிஜ்ரத் செய்து, யுத்தம் செய்து, பல தியாகங்களை செய்த நபி(ஸல்) அவர்கள் செய்த ஹுதைபியா உடன்படிக்கை எங்கே? நாம் எங்கே? சிந்திப்போமா?

Irish Shaheed

8 கருத்துரைகள்:

சமாதனம் சாமய என்று இந்த சில நா.... மூலம் மீண்டும் சமூகம் காட்டிக்கொடுப்பதில் இருந்து காப்பாற்ற, இளைஞர்களே விழித்து எழுங்கள்

சமாதானம், சமரசம் வருமென்றே மனம் சொல்லுகிறது, ஏனெனில் இதைதான் நம்மவர் இதுவரை செய்துள்ளனர்,இதனால்தான் இவ்வளவு அடி ஒரே தடவையில் பிரமாண்டமாக.இந்த விட்டு க் கொடு ப் பை, சமரசதை பெருந்தண்மையென்று நினைக்காமல்,கோழை பொண்ணைத்தணமென்று மட்டும் நினைத்துக்கொள்ளவும். அல்லது, பட்ட துன்பமும், வேதனையும்,நஷ்டம் கஷ்டமும் போதாதென்று நினைத்தாலும் விட்டு க் கொடுத்து சமரசம் ஆகிக்கொள்ளுங்கள். உங்களுக்காக பின் நின்றவர்கள் தொடர்ந்தும் நிற்பார்களென மட்டும் அப்போது நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்.

NEXT TIME,ADIKKU ADI.IDU THAAN MARUNDU.

நாங்கள் ஓட்டு போட்ட அரசு எங்களை அடித்து , தீ வைத்து , பொருட்களை கொள்ளை அடித்துக்கொண்டு ,போக ஒத்துழைக்க காரியம் முடித்து விட்டு எம்முன் நாடகமாடுது, , இதற்குத்தானா இந்த அரசை கொண்டு வந்தோம் , இனி எந்த கட்சியும் வேண்டாம் இனி வரும் தேர்தலில் இந்த பாடம் புகட்டுவோம்

இது போன்ற படங்கள் சர்வதேச புத்தகங்களில் முகப்பு அட்டையில் வர வேண்டும்

we must not rest until all racists (small or big, student or under age boys, old or young women) are given proper punishment by the courts of law. this is simply racists and hooligans (who has no religion) first looting and then destroying muslims property and not a fight between muslims and buddhists so no need for talks between us and fighting for just punishment is the right thing to do.

நவ்சர் துரதிர்ஷ்டவசமாக " எல்லாம் அல்லாஹ் பாத்துக்கொள்வான்" என்னு சொல்லி உண்ணுவதிலும் உறங்குவதிலும் காலத்தைகழிக்கும் ஒரு கூட்டம் இருக்கும்வரை நம்மக்கள் கோழைகளாகவே இருப்பார்கள்.

Post a Comment