Header Ads



யானைகளின் இன்றைய பரபர, கூட்டத்தில் என்ன நடந்தது..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது.

அரசியல் தொடர்பில் அக்கறை காட்டி வரும் பலரும் எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.

இதன் போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்ப்பார்க்கும் வகையில் மறுசீரமைப்பு கட்சிக்குள் துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்றால், அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க செயற்குழுக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் எதிர்பார்க்கும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால், அவர்களை கட்சியில் இருந்து நீக்குவது எனவும் செயற்குழு தீர்மானித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால், அவர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ரணிலின் நரி தந்திரம் இனியும் நடக்குமா இல்லையா என்று காலம் பதில் சொல்லும் .

    ReplyDelete

Powered by Blogger.