Header Ads



சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர்கள் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

இன்று (15) மல்வத்து மஹநாயக தேரரை சந்திக்க சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. ஐந்து நேர தொழுகைகளின் பெயர்கனையும் எத்தனை ரக்அத்துகள் என்றும் அமைச்சர் சரியாக சொல்வாரென்றால் அவரது கருத்தை சிந்திக்கலாம்.

    ReplyDelete
  2. who paid paid you for this beginning ?

    ReplyDelete
  3. Well done mr. Musthafa. But please Dont send the muslim students to pansala every morning.

    ReplyDelete
  4. இது பேரினவாதிகளுக்கே சாதகமாக அமையும். அதாவது அவர்களது கலாசாரம் மற்றும் நடைமுறைகள்தான் முதன்மை பெறும்.இப்போதைய நிலையிலேயே சன்மார்க்க விடயங்களை கடைபிடிப்பதற்கு அப்பப்போது சவால்கள் வரும் போது எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிட்டு தனித்துவத்தை பேண எத்தனை பேரின அதிகாரிகளின் தயவை எதிர்பார்க்க வேண்டி வரும்.இவரது கூற்று எது போன்றதென்றால் முஸ்லிம்களுக்கு என்று தனியான முஸ்லிம் தனியார் சட்டம் தேவையில்லை எல்லோருக்கும் பொதுவான ஒரு சட்டமே இருக்க வேண்டுமெனச் சோல்லும் தேரரின் கூற்றைப் போன்றுள்ளது.(ஏ.எம். ஆரிப் , நிந்தவூர்)

    ReplyDelete

Powered by Blogger.