Header Ads



"முஸ்லிம்களுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடு, என பொய் கருத்து சர்வதேசத்தில் வெளியிடப்படுகிறது"

தெல்தெனிய இனக்கலவரம் தீவிரமைடைய தொடர்பில பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே பிரதான காரணம் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட  அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில் மக்களின் தகவல் அறியும் சட்டமூலம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று -06- காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற வகையில் இலங்கையும் தற்போது காணப்படுவதாக சர்வதேச மட்டத்தில் பொய்யான கருத்துக்கள் பரவலாக வெளியிடப்பட்டு வருகின்றது. 

 ஆனால் உண்மை நிலையினை பற்றி எவரும் குறிப்பிடுவது கிடையாது . சிலர் பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது அரசியல் செல்வாக்கினை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக தேசிய அரசாங்கத்தின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் . இனவாத கலவரத்தினை இனவாத கொள்கையின் அடிப்படையிலேயே தீர்வினை காணமுயற்சிகளை மேற்கொள்ள முயல்வதை அம்பாறை விவகாரததில் அறிய முடிந்துள்ளது.

தெல்தெனிய விவகாரம் கண்டிக்கத்தக்கதாகவே காணப்படுகின்றது . பாதிக்கப்பட்ட சிங்கள இனவத்தவரின் மீது எவ்வித தவறுகளும் கிடையாது . என்ற விடயம் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவுள்ளது. 

இனக்கலவரம் தீவிரமடைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே முக்கிய காரணமாக காணப்படுகின்றது. தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை பொலிஸார் கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருததை ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. 

பாதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்த பின்னரே அவரது தரப்பினர் விரக்தியுற்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பொது மக்களின் தகவல் அறியும் சட்டத்தினை அரச தரப்பு அதிகாரிகள் பின்பற்றாமையின் காரணமாகவே மக்கள் குறித்த விடயம் தொடர்பில் எவ்வித தகவலும் அறியாமல் கலவரத்தினை மேற்கொண்டுள்ளமை சாதாரணமாகவே காணப்படுகின்றது.

தற்போது தெல்தெனிய கலவரத்திற்கு மூலகாரணம் பொதுபல சேனா அமைப்பினரே என்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகவலைதளங்களில் பொய்யான கருத்துக்களை பரப்பி மக்களை திசைதிருப்பவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள பொலிஸ் தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

 தேசிய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம் பெற்றுள்ள கலவரம் தொடர்பில் இதுவரை காலமும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே தொடர்ச்சியாக இது போன்ற இனக்கலவரங்கள் இடம்பெற்று வருகின்றது. நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் அமைச்சர்கள் தமது சுய இலாபத்திற்கு மாத்திரமே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த விவகாரம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறியில்லாவிடின் நாட்டின் எதிர்காலம் சிரியா போன்ற நாடுகளின் நிலைமைக்குத் தள்ளப்படும் என்ற விடயத்தினை தேசிய அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. We must obey your statement. These are the propagada being made by islamic diaspora arnd the globe.

    ReplyDelete
  2. இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது மூலகர்த்தா நீதான் என்பதை உனது சவ வீட்டுக்கு சென்று உனது ஆதரவு காடையர்களை ஏவீ விட்டது நீ தானே.

    ReplyDelete
  3. இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது மூலகர்த்தா நீதான் என்பதை உனது சவ வீட்டுக்கு சென்று உனது ஆதரவு காடையர்களை ஏவீ விட்டது நீ தானே.

    ReplyDelete
  4. nay nayodaththan serum. neenga ennthada puluththuneenga???

    ReplyDelete

Powered by Blogger.