March 07, 2018

முஸ்லிம்களின் நிலைமை, தொடர்பில் நான் கவலையடைகிறேன் - கூட்டுப்படைகளின் தளபதி


முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய  உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய  ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே  அவர்களுக்கு   இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து  நான் கவலையடைகின்றேன்.  என்று  கூட்டுப்படைகளின்  பிரதானி  ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். 

அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  முயற்சி  எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு   கருத்து  வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல.  எனவே  எமது அனுகுமுறை  வித்தியாசமாக இருக்கும். தற்போது   அவசரகால நிலையின் கீழ்  இந்த விடயத்தில்    தலையிட எமக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அதன் கீழ் நாங்கள்  குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி  மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில்    நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருப்போம்.    தற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே   நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒருவிடயத்தை  கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன்  எமக்கு வழங்கிய  ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம்.  முஸ்லிம் மக்களின்   மொழி அறிவு எமக்கு  பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம் எனவே அவர்களின் நிலைமை தொடர்பில்    நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

(ரொபட் அன்டனி)

16 கருத்துரைகள்:

அது உளவுத்துறை சார்ந்த விடயமல்ல காட்டிக்கொடுப்பு மற்றும் சகோதர இனத்துக்கு செய்த துரோகமே.

அதைவிடவும் கவலை - எந்த ரணிலையும் மைத்திரியையும் ஆட்சிக்குக் கொன்டுவர இந்த முஸ்லீம்கள் காரணமாக இருந்தார்களோ அந்த முஸ்லீ்ம்களே இதே ஆட்சிக்காரர்களால் வேட்டையாடப்படுவது - அல்லது அவ்வாறு வேட்டையாடப்படும் போது அதனை வெறுமனே பார்த்துக்கொன்டு கையாலகாத
அரசாங்கமாக இருப்பதே - வேதனைக்கும் கவலைக்கும் உரிய விடயமாக உள்ளது.

Danger report awarkal avhchappafukirarkal tamilarkalum muslimkalum onrupaduwarkal enru payandu muslimkalum thaan tamilanai kattik koduthtaan enru report koduththullaan. be careful.

Thanks for your statement.. but we need action without delay.

பொது மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் இப்படியான தகரக் தகவல்களைக் கொடுத்து தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களுக்கும் இடையில் இன முறுகல்களை உண்டுபண்ணுவது இந்த செய்துதியின் முழு நோக்கமும் ஆகும் இதை பொது மக்களாகிய நாங்கள் நுணுக்கமாக விளங்கி செயல்படவேண்டும்

thank you sir for your kind words.

Ethai than ailarukkum thareium
Thanai unkalai kappa it hurts kenravankalai kappaihunkal athukkaka mane that thanmai

முஸ்லிம்கள் எல்லாம் துரோகிகள்,தமிழர்கள காட்டி கொடுத்ததுக்கு நல்லா அனுபவிங்கடா,கெடுவான் கேடு நினைப்பான்...

pl appoint a President commission to find the truth behind the death of sinhalese brother of ours in teldeniya and start arresting the culprits young buddist monksm who came with the tee shirt and trouserfrom South to hail the pettol bombs in kandy area.

Eppa karuna,daglas thevanantha,that master,lppaulla Tamil politisien ellam Tamil peyaril ulla muslimkala? Thurohi turohi
Enru solli paduthukkondu unagalmeleye thuppikkollungal utthamarhale!

Eppa karuna,daglas thevanantha,thaya master,lppa ulla Tamil politisien ellam Tamil peyaril ulla muslimkala? Thurohi turohi
Enru solli paduthukkondu unagalmeleye thuppikkollungal utthamarhale!

இப்படியான காட்டி கொடுப்புகள் செய்தபடியால் தான் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்ற பட்டிருப்பார்கள். இப்போது அதற்கு சாட்சி கிடைத்துவிட்டது.

For Tamil people ...now it's the time for celebration...of course with biriyani :-)

முஸ்லிம்கலை வடக்கில் இருந்து வெளியேற்றியது துன்பவியல் சம்பவம் என்று பிரபாகரனும்,
அன்ரன் பாலசிங்கம், தமிழ் செல்வன், இந்த மூவரும் 2002 ல். கிளிநொச்சியில் நடந்த பத்திரிகைமாநாட்டில் வைத்து ஒரு நிருபர் கேட்ட கேள்வி பதில் அளித்து விட்டார்கள்
இது யாவரும் அறிந்த விடயம் இதற்கான ஆதாரமும் உள்ளது. இதில் இருந்தாவது எமக்கு
புறியவில்லை கூட்டுத் தலபதியின்பேச்சுக்கு பின்னால் மகிந்த அனி இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக ்தெரிகின்றது .
இவர்களிட்கு பயம் தொட்டுவிட்டது என்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது,இந்த தர்னத்தில் முஸ்லிம்களும்,தமிழர்களும் இனைந்தால் இந்த நாடும் இவர்களும் தாங்கமாட்டார்கள் என்பதுதான் காரணம்.
இதே கூட்டுத் தலபதிக்கு தெரியாதா? கர்ணா,பிள்ளையான், டக்ளஸ் ,இன்னும் விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோபேர் உள்ளனர்
இவர்கள் எல்லாம் காட்டி கொடுத்தது இந்த அதிகாரிக்கு தெரியாதா? அல்லது அந்த சமயம்
அவர் கோமாவில் இருந்தாரா? இவருக்கும் மகிந்தவுடைய மகன் கடல்படையில் இனைந்து
இருந்த நேரம் இவர்தான் அவருக்கு ஆதரவாகவும் இருந்தார்.இத்தர்னத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இனைந்தால் தங்களுக்கு ஆபத்து என்பது தெரிந்துதான் இத்தர்னத்தில்
இந்த பொய்யான வதந்தியை கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட யுத்தம் முடிந்து 9 வருடங்களாயிட்டுது ஏன் இந்த பதிவை முன்பு கூறவில்லை?
வருடா வருடம் யுத்த வெற்றியை கொண்டாடும் இந்த அரசாங்கம் முஸ்லிம்கலை ஏன் கொளரவிக்கவில்லை?காலத்துக் ஏத்தமாதிரி சிந்தியுங்கள்.

Post a Comment