Header Ads



காச நோயினை இல்லாதொழிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் மகாநாடு ஆரம்பம்


உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் காச நோயினை இல்லாதொழிப்பதற்கான மகாநாடு இந்தியாவின் நிவ்டில்லி நகரத்தில் நேற்று (13) ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இம் மகாநாடு ஆரம்பிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்கு இலங்கை நாட்டின் பிரதி நிதியாக சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களும் கலந்து கொண்டார்.

இம் மகாநாட்டில் காச நோயினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு தேவையான வழிகாட்டல்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் காச நோயினை இல்லாதொழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றி சுகாதார அமைச்சர் விஷேட உரை ஒன்றினை வழங்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இம் மகாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் DR. TEDROS அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் DR புனம் சந்திபால் சிங் மற்றும் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மகாநாடு ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்திய பிரதமர் மற்றும் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின்  பிரதிநிதிகள் கலந்து கொண்ட குழுப் புகைப்படம் 

No comments

Powered by Blogger.