Header Ads



எரிக்கப்பட்ட பள்ளிவாசல்களை, கண்டு அதிர்ச்சியடைந்தேன் - ரணில்

-AAM. Anzir-

கண்டியில் எரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக பிரமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே  இன்று 15.03.2018 நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்முறையினால் பாதிக்கப்பட்ட கண்டிக்கு நான் சென்றபோது அங்கு எரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். வன்முறையாளர்கள் மூர்க்கத்தனமாக செயற்பட்டுள்ளார்கள்.

1983 கலவரத்தை வயதானவர்களே மேற்கொண்டார்கள். ஆனால் தற்போது அந்நிலை மாறி இளவயதினர்  பங்கேற்றுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது.

இனவயதினர் வெறுப்பு மீது கொள்ளும் ஆர்வத்திற்கு சமூக ஊடகங்களே காரணம்.

எனவே சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதவிடயமாகிறது. வன்முறையில் பங்கேற்ற 250 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பிக்குகள்.

அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பிரதமர் இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இவரு நைசா அது இது சொல்லி காலண்ட பாக்குறாரு இவன் தானே சம்பவம் நடைபெற்று இருக்கும் போது நாட்டின் நீதி சட்ட அமுலாக்க அமைச்சர் போதத்துக்கு வேறே பிரதமர் பொறுப்பு உள்ளவராக இருக்கிறாரு .செய்றது எல்லாம் செஞ்சி போட்டு இப்ப அடுத்த பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிறரினைக்கு முன்பு வெற ஒரு நரி தந்திரம் போட்டு திசை திருப்ப பாக்குறாரு இன்னொரு அழிவுக்கு.

    ReplyDelete
  2. Any way, his honey moon is over.....

    ReplyDelete
  3. சொல்வதெல்லாம் பொய், பொய்தவிர வேறொன்றுமில்லை! நம்ப முடிவில்லை!

    ReplyDelete

Powered by Blogger.