Header Ads



அம்பாறை வன்முறை - இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன..?


அம்பாறை வழக்கின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் (Updated on 13.03.2018)

கடந்த கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் (IGP) உட்பட மேல்மட்ட அதிகாரிகள் எங்களை சந்தித்த போது அம்பாறை வழக்குகளை பொலிஸார் நடாத்தும் விதம் தொடர்பில் எங்களது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் அவ்வழக்கினை கையாளுகின்ற SSP முன்னிலையிலேயே வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் அங்கு SSP தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேசியிருந்தார். கடைசியில் பொலிஸாரின் பக்கம் பல குறைபாடுகள் இருப்பதனை பிரதமரும் பொலிஸ் மா அதிபரும் ஏற்றுக்கொண்டதுடன் அதற்கு தீர்வாக மேலதிக விசாரணைகளை கிழக்கு மாகாணத்திற்கான பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தலைமையிலான புதிய குழுவிற்கு மாற்றியதுடன் பக்கச்சார்பற்ற புலன் விசாரணை மற்றும் நேர்மையான வழக்கு நடவடிக்கைகளிற்கான உத்தரவாதங்கள் எமக்கு அளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றும் (13.03.2018) பெரும் திரளான மக்களும் பௌத்த பிக்குகளும் குழுமியிருந்த நிலையில் 03 வழக்குகள் அம்பாறை நீதிமன்றில் அழைக்கப்பட்டன. எமது தொடர்ச்சியான வற்புறுத்தல்களின் விளைவாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 05 பேருக்கு மேலதிகமாக இன்னும் 06 நபர்கள் அம்பாறை கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களை பிணையில் விடக்கூடாது என்ற எமது தொடர்ச்சியான ஆட்சேபனைகளின் நியாயத்தை உணந்திருந்த பொலிஸார் இம்முறை பிணைக்கான எதிர்ப்பினை தாமும் தெரிவித்திருந்தனர். 

மேலும் இத்தாக்குதல்கள் அனைத்தும் தொடர்ச்சியான ஒரு  சம்பவத்தின் பகுதிகள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டவர்களை அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக இணைக்க வேண்டும் என்றும் அனைவரும் நீதவானால் பிணையில் விட முடியாத சட்டமான (ICCPR Act) இல் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் இயன்ற வரையில் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும் எமது வாதத்தை முன்வைத்திருந்தோம்.

இறுதியில் 04 நபர்களையும் எதிர்வரும் மார்ச் 19 வரை விளக்கமறியிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அடையாள அணிவகுப்பிற்கான உத்தரவை வெளியிட்ட நீதிமன்றம் வழக்குகளை 2018.03.19 மற்றும் 2019.03.22 ஆம் திகதிகளிற்கு ஒத்திவைத்தது.

- சட்டத்தரணிகள் காலித் முஹைமின், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட் -

குரல்கள் இயக்கம்

3 comments:

  1. மதிப்புக்குரிய சட்டத்தரணிகளுக்கு எமது ஆழ்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். தயவு செய்து எந்த தயவு தாட்சண்யமும் இன்றி அநியாயம் செய்தவர்களுக்கு உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுக் கொெடுக்க உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள். உங்களுடன் எமது பிரார்த்தனைகளும் துஆக்களும் தொடரும். அல்லாஹ்வின் அருளும் கிருபையும் நிச்சியம் உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் உங்களது கடின போராட்டத்திற்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம்

    ReplyDelete

Powered by Blogger.