March 21, 2018

இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கை

குடிவரவு, குடியகல்வு நடைமுறைஎன்பது எவ்வகையான தேவைகளுக்காகவும் நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்குள் வரும் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய அத்தியவசிய அன்றாட சட்ட செயற்பாடாகும். குடிவரவு, குடியகல்வு இச்செயற்பாடானது நாட்டின் தேசிய, பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார காரணிகளுடன் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் பிணைந்து காணப்படுகிறது. 

எனவே அதன் நடைமுறைப்படுத்தலானது காலத்திற்குகாலம் தேசிய தேவைப்பாடுகளுக்கமைய நேர்த்தியான திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளாகிய நாம் இந்த சேவையின் முதன்மைக் காரணியாக இருப்பினும் நேர்த்தியான சேவையொன்றுக்கான நிர்ணயிக்கப்பட்ட அதன் கல்வித் தகைமைகள், திறமைகள், ஆற்றல்கள் மற்றும் அனுபவங்களுடாக சேவையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கையை வகுப்பதற்கும் திட்டமிடலுக்கும் பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக்கள் எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் குடிவரவு, குடியகல்வுத் துறையை அபிவிருத்தி செய்து உயர்தர சேவையொன்றாக மாற்றமுடியாது போயுள்ளது.

தற்போதைய பின்தங்கிய தேர்வாணையத்திட்டம் மூலம் அதிகாரிகளின் தொழில்முறை எதிர்காலம் இருண்டுபோயுள்ளது. அதிகாரியொருவருக்கு அவரது தகுதிகள், அனுபவம் மற்றும் விசேட திறமைகள் ஊடாக தொழிசார் வாழ்வாதார அபிவிருத்தியடையும் வாய்ப்பு கிடைக்கப்பெறாமலிருக்கிறது. பெரும்பாலான அதிகாரிகள் பணியில் இணைந்து கொண்ட நாளிலிருந்து முதற்கட்ட கடமைகளைச் செய்வதுடன் மாத்திரம் ஓய்வுபெறச் செய்யப்படுவதானால் பதவி உயர்வடையும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அவநம்பிக்கை காரணமாக நீண்ட காலமாக அதிகாரிகளின் மந்த செயற்பாடு இயற்கையானதொன்றே. சேவையில் பல்வேறு பிரிவுகளில் கடமைகளில் ஈடுபட்டு தொழிமுறை முதிர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வலையமைப்பொன்று இல்லாததனாலும் பயிற்சி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் சரியான முறையில் வழங்கப்படாததாலும் இப்பாதகமான நிலைமை இன்னுமின்னும் தீவிரம்அடைந்துள்ளது.

தொழிற்சங்கம் ஒன்று என்ற வகையில் இந்த அதிருப்பதியான நிலமையை இல்லாது செய்து மேலும் பயனுள்ள மற்றும் உயர் திறனுடைய நாட்டிற்கு பொருந்தக்கூடிய குடிவரவு, குடியகல்வு சேவையை நிறுவுவதை நோக்கமாக மனதில் கொண்டு மேற்கொண்ட அமைதிப்  போராட்டங்கள் பல தசாப்தங்களைக் கடந்து சென்றுள்ள போதும் அது சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு நல்ல தீர்வுக்காகவும் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

எனவே குடிவரவு குடியகல்வு சேவை தற்சமயம் முகங்கொடுத்துள்ள தீவிர சிக்கல்களைத் தீர்த்து உங்களுக்கு உயர்மட்ட சேவையை பெற்றுத்தரும் அதே சமயம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய அதியுயர் குடிவரவு, குடியகழ்வு சேவையை நிருவுவதற்காக கீழ்வரும் முதன்மைக் கோரிக்களை வெற்றி கொள்வதை அடிப்படிடையாகக் கொண்ட தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றிற்குள் நுழைய வேண்யடி தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
1. குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளின் தொழில் அபிவிருத்தியினூடாக நாட்டிற்கு
உயர்தர சேவையை பெற்றுக்கொடுக்கக்கூடிய நியாயமான சேவைப்பிரமாணம் ஒன்றை
பெற்றுக் கொடுத்தல்.
2. தற்போது செயற்படாத நிலையில் உள்ள திணைக்களத்தின் வழக்குத் தொடரும் பிரிவை திரும்ப அமுலாக்குதல்.

திணைக்களத்தின் வழக்குத் தொடரும் பிரிவு செயற்படாத நிலையில் உள்ளமையும் எமது சேவையுடன் நேரடியாகப் பிணைந்து;ளள அதிகாரபூர்வ கடமைகளை சேவையிலிருந்து நீக்கியிருப்பதும் முழுச்சேவையின் நடவடிக்கைகள் பலவீனமடையக் காரணமாகவுள்ளது.

நாட்டின் நற்பெயருக்கும் பாதுகாப்பிற்கும் நேரடியாகத் தாக்கம் செலுத்தககூடிய சட்டவிரோத குடியேற்றவாசிககள், குடிபெயர்ந்தோர் மற்றும் மனித கடத்தல்காரர்கள் போன்றோர்களை அடக்கி அது தொடர்பான நீதியை அமுல்படுத்தும் நேரடி அதிகாரத்தை அது தொடர்பான சிறப்பு அறிவைப் பெற்ற குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இச்சேவையுடன் நேரடித் தொடர்புடைய இச்செயற்பாடுகள் மூலம் குடிவரவு, குடியகல்வுச் சேவையை வழுவூட்ட திணைக்களத்தின் வழக்குத் தொடரும் பிரிவை மீண்டும் செயற்படுத்த வேண்டும்.

3. குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளின் சேவையை வெளிநாடுகளில் உள்ள
இலங்கையின் இராஜதந்திர பணிமனைகளினூடாக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தல்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகள் காரியாலயங்களுடாக குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் போது அது தொடர்பான தொழில் அறிவும் அனுபவமும் பெற்ற அதிகாரிகளின் சேவையை பெற்றுக்  கொள்ளாததன் காரணமாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களும், வெளிநாட்டுப் பிரஜைகளும் மோசமான சி ரமங்களுக்கும் தேவையற்ற சிக்கல்களுக்கும் தொடா ந்தும் ஆளாகவேண்டியுள்ளது. எனவே இச்சேவை தொடர்பான முழுமையான அறிவும், தொழில்சார் அனுபவமும் உடைய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளின் சேவையை வெளிநாட்டுத் தூதரங்களுடாக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் படிமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் கீழ்வரும் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்படி மேலதிகாரிகளிடம் வன்மையாக வேண்டிக்கொள்கிறோம்.

* நாளாந்தம் வெளிநாடு செல்லும் மற்றும் நாட்டிற்குள் வரும் பயணிகளின் தொகை சடுதியாக அதிகரித்தலும் அதற்கமைவாக கடமைகைளை செய்வதற்குப் போதுமான குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளை வேலைக்கமர்த்தாமலிருத்தல். எ நாளொன்றின் 24 மணி நேரமும் கடமையில் ஈடுபடும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் கூட சேவைத்தளத்தில் கிடைக்காத போதும் கடமைகளின் தன்மை மற்றும் தரமற்ற உபகரணங்கள் காரணமாக அதிகாரிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களும் பிரச்சினைகளும் உக்கிரமடைத்திருத்தல்.

* நாட்டிற்கு வரும் பலதரப்பட்ட சுகாதார பிரச்சினைகளைக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுடன் முதலாவதாகவும், நேரடியாகவும் தொடர்புபடும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் எதிர்கொள்ளும் ஆபத்திற்கு எவ்வகையான தீர்வையும் பெற்றுக்கொடுக்காதிருத்தல்.

* குடிவரவு, குடியகல்வு சேவையின் தரத்தினை உயர்த்திட பல நாடுகளினூடாகவும் வெளிநாட்டு ஸ்தாபனங்களினூடகாவும் வழங்கப்படும் பயிற்சிநெறிகள் மற்றும் புலமைப்பரிசில்களை முறையாகவும், நியாயமாகவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகாரிகளுக்கு இழக்கச் செய்யப்பட்டிருத்தல்.

* நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் நாட்டிலிருந்து வெளியேறும் இடமான கடுநாயக விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள குறுகிய இடத்தில் அதிகளவிலான பயணிகளை கையாளுகையில் அதிகாரிகளும் பயணிகளும் அடையும் இன்னல்கள் சம்பந்தமாக நாம் மேலதிகாரிகளிடம் எவ்வளவு அறிவுறுத்தியும் இதுவரை எவ்விதத் தீர்வையும் பெற்றுத்தராதிருத்தல்.

நாம் எதிர்கொள்ளும் கடுமையான அநீதிகளுக்கு மத்தியிலும் பல ஆண்டுகளாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்காமலிருந்தமை அவ்வாறானதொரு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும் நாட்டின் நற்பெயர் பற்றியும் சேவையின் கௌரவத்தைப் பற்றியும் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்ந்திருந்தனாலேயாகும். எனினும் இதன் பின்னரும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு மேலதிகாரிகளிடமிருந்து உணர்வுபூர்வமான பதில் கிடைக்காத போது கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றுக்குள் உட்பிரவேசிக்க எமக்கு நேரிடலாம்.

இதனால் உங்களுக்கு யாதொரு இன்னலும் ஏற்படுமாயின் அது தொடர்பாக நாம் மிகவும் கவலைடைகிறோம். மிகவும் உயர்ந்த தொழில் மட்டமொன்றின் மூலம் உங்களுக்கு நல்லதொரு சேவையை பெற்றுக்கொடுத்தல் எமது குறிக்கோளாகும் என்பதை மிகவும் கருணையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாக விடுக்கப்பட்ட மிக நியாயமான இக்கோரிக்களைப் புறக்கணித்த மேலதிகாரிகள் இது தொடர்பான அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் நாம் இங்கே வலியுருத்துகிறோம்.

நன்றி

இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளின் சங்கம

0 கருத்துரைகள்:

Post a Comment