Header Ads



பொன்சேக்கா சட்டம்ஒழுங்கு அமைச்சரானால், மறுநாளே சு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமரும்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டால், மறுநாளே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என பலர் எங்களிடம் கேட்கின்றனர். வேறு சிலருக்கு இவை பற்றிய புரிதல் இல்லை. வாய்க்கு வந்தவற்றை பேசுகின்றனர்.

அரசாங்கம் தவறான முடிவுகளை எடுத்தால் மக்கள் வீதியில் இறங்குவார்கள் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதை தாங்க விரும்பவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, சரத் பொன்சேகாவுக்கு இந்த அமைச்சு பதவியை வழங்க வேண்டாம் என வலியுறுத்த உள்ளதாக அரசியல் தரப்புத் தககவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்த போதிலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.