Header Ads



மகிந்த ஏன், கையெழுத்து போடவில்லை தெரியுமா..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச கையெழுத்திடவில்லை.

இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும,

“மகிந்த ராஜபக்ச என்பவர் நாட்டின் தேசிய தலைவர். அவரது கையெழுத்து, அவரது வருகை, அவரது வாக்கு என்பன சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையதை விட பலமானதும், பெறுமதியானதுமாகும்.

அதனை நாங்கள் தேவையான நேரத்தில் பயன்படுத்துவோம். அதனை பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கும் போது அவர் தலைமை தாங்கினார்.

மக்கள் அரசாங்கத்தை தோற்கடித்தனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார்” என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.