Header Ads



கபீர் ஹாசிம் தூக்கப்படுவாரா..?

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசிமை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க கபீர் ஹாசிம் தோல்வி அடைந்திருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆனால் அவர் இனவாதத்துடன் நடந்துக் கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக பிரதி பொதுசெயலாளராக இருக்கும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை நியமிக்க வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. அவர் இருந்துதான் என்ன இல்லாவிட்டால்தான் என்ன. இவரால் சமூகத்திற்கு செய்தவற்றை யாரது சொன்னால் நன்றாக இருக்கும் தெரிந்துகொள்ளுவதக்கு.

    ReplyDelete
  2. இவர் உள்ளூராட்சி தேர்தல் ஒதுக்கீடுகளில் இனரீதியாக (முஸ்லிம் சமூகத்திற்கு)சார்பாக நடந்துகொண்டார் என்பதுதான் அவரை நீக்க வேண்டும் என்ற சிந்தனையை இனவாதிகளிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்தப் பக்கம் நீங்கள்(நூறுல்) வேறு விமர்சிக்கிறீர்கள்.தேநீர் கடையில் அரசியல் பேசுவது போன்று எம்மவர்களை விமர்சிப்பது இலகு. அந்த நிலைமையில் இருந்து பார்த்தால்தான் அதனதன் கனதி புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.