Header Ads



(தீ வைக்கப்பட்ட முஸ்லிம், வீட்டில் நடந்தது) தரிந்து இரங்கவின், பேஸ்புக் பக்கத்திலிருந்து..!

கண்டியில் ஏற்பட்ட கலவரங்களை பார்வையிடச் சென்ற Tharindu Iranga என்ற சிங்கள சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய ஒரு குறிப்பு.

இந்த நாசகாரச் செயலை இனியாவது நிறுத்துங்கள்.

" கண்டியில் நடந்த சம்பவங்களை பார்வையிட அந்தப்பகுதிக்குச் சென்றிருந்தோம்.

(2018.03.10) காலை 8:00 மணிக்கு கென்கல்ல பகுதியில் ஒரு வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டுக்கு திரும்பும் இடத்தில் சில இராணுவ அதிகாரிகளும் இருந்தார்கள்.

நாம் வீட்டுக்குள் நுழையும்போது வீட்டின் முன் ஹோலில் நான்கைந்து பேசன்களில் தண்ணீர் நிறைத்து வைத்திருந்தார்கள்.

யாராவது முன் ஹோலில் தண்ணீர் பேசன்களை வைப்பார்களா ? ஏன் இப்படி என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் சொன்ன பதில்...

"நேற்றும் (09.03.2018) வயல்பக்கத்தில் இருந்து நான்குபேர் வந்தார்கள். நாம் அவர்களை விரட்டியடிக்க முற்பட்ட போது பொலிஸார் எம்மை விரட்டிவிட்டார்கள்.

நேற்று இரவும் எமது வீடுகளுக்கு தீ வைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்தோம். அன்றும் எமது வீடுகளுக்கு தீவைக்கும்பொழுது எமது தண்ணீர் லைனயும் கட் பண்ணியிருந்தார்கள்.

அதனால் இரவில் தீ வைத்தால் அதை அனைப்பதற்கு வீட்டின் முன்னால் கொஞ்சம் தண்ணீரை சேமித்து வைத்திருக்கின்றோம்"

என்று கணவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மனைவியின் கண்கள் முழுவதும் கண்ணீரால் 
நனைந்து இருந்தது.

No comments

Powered by Blogger.