Header Ads



முஸ்லிம் சட்டத்தரணிகள் தூங்குகிறார்களா..?

அம்பாரையில் ப‌ள்ளிவாய‌லை தாக்கிய‌தை குற்ற‌மாக‌ பார்த்து யாரையும் கைது செய்யாத‌ பொலிசார் ஹோட்ட‌லை உடைத்தார்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டில் ஐவ‌ரை கைது செய்து மூன்று நாட்க‌ளில் பிணையில் விட்டு உல‌க‌ சாத‌னை செய்துள்ள‌ன‌ர்.

இது ச‌ம்ப‌ந்த‌மான‌ வ‌ழ‌க்கு நேற்று  நீதிம‌ன்ற‌த்துக்கு வ‌ந்த‌ சில‌ இள‌ம் முஸ்லிம் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் சென்று குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கெதிராக‌ வாதித்தும் குற்ற‌வாளிக‌ள் பொலிசாரின் வாத‌த்தால் பிணையில் விட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

எப்ப‌டியிருப்பினும் இத‌ன் போது க‌ல‌ந்து கொண்ட‌ இள‌ம் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் பாராட்டுக்குரிய‌வ‌ர்க‌ள். ஆனாலும் ப‌ல‌ கேள்விக‌ள்  இங்கு எழுகின்ற‌ன‌.

அம்பாரை ச‌ம்ப‌வ‌ம் என்ப‌து த‌னிந‌ப‌ர் பிர‌ச்சினை அல்ல‌. முஸ்லிம் ச‌மூக‌த்துக்கெதிரான‌ வ‌ன்செய‌ல்.  இதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ குற்ற‌வாளிக‌ளுக்கெதிராக‌ வாதாட‌ த‌ர‌மான‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் ஏன் முன்வ‌ர‌வில்லை.?
க‌ல்முனை ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் ச‌ங்க‌ம் உள்ள‌து. இது போல் முஸ்லிம் காங்கிர‌சில் ஊர்ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி கும்ப‌ல் இருக்கின்ற‌ன‌ர். சில‌ ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளாம்.
இவ‌ர்க‌ளில் எவ‌ரும் முன்வ‌ராமைக்கான‌ கார‌ண‌ம் என்ன‌?

அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் சுமார் மூன்று ல‌ட்ச‌த்துக்கும் மேல் முஸ்லிம்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ள் ம‌த்தியில் பொலிசாரின் போலித்த‌ன‌மான‌ வாத‌த்தை முறிய‌டிக்கும் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் இல்லையா?  இருந்தால் ஏன் முன்வ‌ர‌வில்லை?

சில‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் ம‌க்க‌ள் பிர‌திநிதியாக‌வும் உள்ள‌ன‌ர். ஏன் இவ‌ர்க‌ள் அக்க‌றை கொள்க‌வில்லை? குறிப்பாக‌ அம்பாரை முஸ்லிம்க‌ளை பாராளும‌ன்றில் பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தும் முஸ்லிம் காங்கிர‌சின் த‌லைவ‌ர், செய‌லாள‌ர், பிர‌தித்த‌லைவ‌ர் என்போரெல்லாம் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளாம். ஏன் இவ‌ர்க‌ள் முன் வ‌ர‌வில்லை.? முன்வ‌ராத‌ இவ‌ர்க‌ளுக்கு முஸ்லிம் ச‌மூக‌ம் என்ன‌ தீர்ப்பை வ‌ழ‌ங்க‌ப்போகிற‌து?

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி

5 comments:

  1. Ungalin poratta kuluvilum...Lawyers.... illayo????
    ACMCyil lawyers illayo..?... National congress il lawyers illayoo...?
    SLFP....UPF...? Lawyers...??? hihihihihi

    ethilum political seyyaatheeergal ellorum sernthu onraai ninru por thodungal...
    Vairu valarkka arasiyal seyya vendaam pls...

    ReplyDelete
  2. What is your party doing... Man?????

    ReplyDelete
  3. மௌலவி அவர்களே முஸ்லிம் காங்கிரஸ் எப்போது முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தது?
    தலைவர் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே?

    ReplyDelete
  4. It seems the so called veteran lawyers from our community have given the Police the necessary points in order to pave the way to "Bail out" the criminals...that's all Moulavi...

    ReplyDelete
  5. neengal srilankavil illa poala?

    ReplyDelete

Powered by Blogger.