Header Ads



9,000 மாணவர்கள் 9 ’A’ சித்திகள் -


2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 9,960 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய 73.05 வீத மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் கணிதப் பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாகவும், இது கடந்த வருடத்தை விடவும் 3 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் பரீட்சகைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய ஆறு மாணவர்கள் முதலிடத்தைப்  பெற்றுள்ள அதேவேளை, 9 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதோடு, அகில இலங்கை ரீதியில் அவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னரும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.