Header Ads



வீரத் தியாகிக்கு 5 லட்சமா..?


கண்டிக்கலவரத்தில் “போராளி” ஒருவர் தனது கையிலிருந்த குண்டு வெடித்து இறந்து போனார்!

அவரை புதைக்கும் போது பெரிதாக ஏதாவது வன்முறைகள் நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சுமளவு படு கேவலமான ஒரு நாள் இந்த தேசத்தில் இருந்தது.

அந்த வீரமரணம் எய்திய போராளிக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் முடிவு செய்திருப்பது பலருக்கும் அறச்சீற்றத்தை உண்டு பண்ணியுள்ளது?

சிங்கள பெளத்த தேசத்தில், சிங்கள பெளத்த ஜனாதிபதியின் ஆட்சியில்...,

பெளத்தத்தை காக்கவென பல நாட்களாக வீதிகளில் உயிரைத்துச்சமென மதித்து, போராடி பல கோடி கணக்கான பொருட்களை கொள்ளையடித்து, நூற்றுக்கணக்கான வர்த்தக மையங்களை தீயிட்டு, பள்ளிவாயல்களை தகர்த்து எரியூட்டி, பலரை காயப்படுத்தி, ஒரு உயிரை பலி எடுத்து அடங்கியிருக்கும் வேள்வியின் வீரத்தியாகிக்கு வெறும் ஐந்து லட்சமா?

பிச்சைக்காசு!

கண்டி ராஜ்ஜியத்தின் சரி பாதியை எழுதி வேண்டுமாறு கனம் தேரோ ஞானசார ஹிமி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

Mujeeb Ibrahim

3 comments:

Powered by Blogger.