Header Ads



கண்டியில் மஹிந்த,சந்தேகத்திற்குரிய 2 அரசியல்வாதிகளும் பங்கேற்பு


கண்டியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவசர விஜயமாக கண்டிக்கு இன்று -09- சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அண்மைய நாட்களாக கண்டியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து சர்வ மதத்தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து மகிந்த ராஜபக்ச, “விசேடமாக இன்று கண்டியில் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து பௌத்தம், முஸ்லிம் மற்றும் இந்து மத தலைவர்களுடன் பேசியிருந்தேன்.

நாட்டின் பொலிஸ் துறை என்பது அரசாங்கத்திற்கு நிகரான ஒன்று. ஆகையினால், கண்டியில் ஏற்பட்டிருந்த சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

இதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக யாரை நியமித்தாலும், அது தமக்கு பிரச்சினையாக அமையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி வன்முறைகளுடன் மகிந்த அணியைச் சேர்ந்த 2 எம்.பி.க்களான ரொஹான்  ரத்வத்தை மற்றும் தினும் அமுனுகம ஆகியோர் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அமைச்சர் ராஜித்தவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மகிந்தவுடன் குறித்த 2 பேரும் இச்சந்திப்பில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.