Header Ads



"எதிர்க்கட்சியாக TNA நீடிக்கும், SLFP யில் மகிந்தவை வைத்திருப்பது பற்றி கேள்வியெழுப்புவோம்"

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நீடிக்கின்றதாக தீர்மானம் எடுத்துள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி அந்தஸ்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நீடிக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு  எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் மஹிந்த தரப்பினர் அங்கம் வகிப்பது பொருத்தமில்லாததாகும். அவர்களை தொடர்ந்தும் கட்சியுடன் வைத்திருப்பதா என்பது  குறித்து கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அழுத்தமாக கேள்வி எழுப்புவோம்  எனவும் குறிப்பிட்டது. 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் நீடிக்கும். இதில் எழுத்துமூல அறிக்கைகளை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இனியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்படுவது குறித்து எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாக பயணிப்பதாக தெரிவித்துள்ளனர். மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் உள்ளனர்.  எனினும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.