Header Ads



என்னை அச்­சு­றுத்தலாமென, கனவு காணாதீர்கள் - அமெரிக்காவிலிருந்து கோத்தா சீற்றம்

டுபாய் விமான நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்ட ரஷ்­யா­விற்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க  வீர­துங்க என்னை சந்­திப்­ப­தற்­காக அமெ­ரிக்கா வர முற்­ப­ட­வில்லை என தெரி­வித்­துள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ, விரைவில் நாடு திரும்­பி­யதும் அர­சாங்­கத்தின் போலி­பி­ர­சா­ரங்­க­ளுக்கு பதி­லடி கொடுப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

நாட்­டுக்­காக நேர்­மை­யாக செயற்­பட்ட என க்கு எதி­ராக போலி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடி­யு­மென அர­சாங்கம் நினைத்தால் அது வெரும் கன­வா­கவே அமையும் என்றும்  கோத்­த­பாய  எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­து­ளளார்.  அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,   

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை சந்­திப்­ப­தற்­கா­கவே ரஷ்­யா­விற்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க அமெ­ரிக்­கா­விற்கு செல்ல முற்­பட்­ட­தாக கூறப்­படும் தக­வல்­களில் எவ்­வி­த­மான உண்­மை­களும் இல்லை. அதே­போன்று உத­யங்க  வீர­துங்க டுபாய் விமான நிலை­யத்தில் விசா­ர­ணைக்கு உட்ப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினால் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் குழப்பம் அடைந்­துள்­ள­தாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மிகவும் மோச­மாக பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்றார். 

தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­லுள்ள சிலர் இவ்­வா­ரான போலி­யான பிர­சா­ரங்­களை கடந்த மூன்று வரு­டங்­க­ளாக மேற்­கொண்டு வரு­கின்­றனர். உத­யங்க வீர­துங்­க­விற்கு என்னை சந்­திக்க வேண்­டிய விசேட தேவைகள் எதுவும் இருக்கும் என நான் நம்­ப­வில்லை. அமெ­ரிக்­கா­விற்­கான அவ­ரது விஜ­ய­மா­னது தனிப்­பட்ட ஒன்­றாக இருந்­தி­ருக்­கலாம்.

எவ்­வா­றா­யினும் உத­யங்­கன வீர­துங்­கவின் பெயரை பயன்­ப­டுத்தி தொடர்ந்தும் எமக்கு எதி­ராக போலி­யான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனவே உத­யங்­கன சுய விருப்பின் பெயரில் இலங்­கைக்கு சென்று விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பொலி­சா­ரிடம் சாட்­சியம் அளிப்­ப­தி­னூ­டாக போலி­யான பிர­சா­ரங்­க­ளுக்கு   முடி­வு­கட்­ட­மு­டியும். 

இத­னூ­டாக அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடியும் என  நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன். நீதி அநீ­தி­யா­கி­யுள்ள சூழலில் அர­சாங்­கத்தின் அடக்கு முறை­க­ளுக்கு அச்­சப்­பட்டு இந்த சவாலை தவிர்த்து கொள்­கின்­ற­மை­யா­னது போலி­யான பிர­சா­ரங்­க­ளுக்கு   பதி­ல­ளிப்­பப்­ப­தா­கவே அமையும். 

கடந்த மூன்று ஆணடு கால­மாக என்னை அகௌ­ர­வப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கம் கடந்த மூன­றாண்டு கால­மாக பல்­வேறு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது. ரத்னா லங்கா பாது­காப்பு சேவை , விமா­னப்­ப­டைக்கு 'மிக்" விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­தமை மற்றும் எவன்கார்ட் கடன்சார் பாது­காப்பு சேவை போன்ற விசா­ர­ணை­க­ளுக்கு நான் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளேன். 

எதிர்­கா­லத்­திலும் விசா­ர­ணை­க­ளக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை வழங்­குவேன். இது­வ­ரை­கா­லமும் எனக்கு எதி­ராக முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யாமல் அர­சாங்கம் புதிய கார­ணி­களை தேடி வரு­கின்­றது. 

 நாட்­டுக்­காக நேர்­மை­யாக செயற்­பட்ட எனக்கு எதி­ராக போலி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடி­யு­மென அர­சாங்கம் நினைத்தால் அது வெரும் கன­வா­கவே அமையும். நாட்டு மக்கள் அரசியல்வாதிகளைவிட முன்னிலையில் உள்ளனர் என்பதை அரசாங்கம் பரிந்து கொள்ள வேண்டும். நாட்டிற்கு எவ்விதமான அபிவிருத்திகளையும் செய்யாது வெறுமனே அடக்கு முறைகளினூடாக ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்ற நிலையில் மக்கள் சரியான சந்தர்ப்பத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். விரைவில் நாடு திரும்பியவுடன் அரசாங்கத்தின் போலியான பிரசாரங்களுக்கு பதில் அளிப்பேன்.   

No comments

Powered by Blogger.