Header Ads



பிரதமராக ரணில் நீடிப்பார், முஸ்லிம் தலைவர்களும் சம்மதம்


பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன.

கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் பிரதமர் பதவியை பொறுப்பேற்க மறுத்துவிட்ட நிலையில் பிரதர் பதவியில் ரணில் தொடருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் ரணில், ஐ.தே.க. தலைமைப் பதவியில் தொடருவதில் கட்சியிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதக கூறப்படுகிறது.

அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை அமைச்சர்களான றிசாத், ஹக்கீம், மனோ, திகாம்பரம் உள்ளிட்டவர்களும் சம்பிக்க மற்றும் ராஜித்த ஆகியோரும் பிரதமர் பதவியில் ரணில் தொடருவதையே விரும்புவதாக அறியவருகிறது.

1 comment:

  1. ரணில் அந்த கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கும்வரை அந்த கட்சியின் வீழ்ச்சியே அது போதாததுக்கு மஹிந்தவின் கட்சியின் வளர்ச்சிக்கும் இவரின் அப்பதவி அவர்களுக்கு சார்பாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.