Header Ads



ஹக்கீமின் அவசர கவனத்திற்கு...!

"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது."

சாய்ந்தமருதில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் கண்ணீர்ப்புகையில் இருந்து தப்பி ஓடியபோது, விரட்டிப் பிடிக்கப்பட்ட சிறுவர்களும் பகுதிநேர வகுப்புகளிற்குச் சென்று வந்த மாணவர்களும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

காடைத் தனங்கள் எந்தத் தரப்பில் இருந்து வந்தாலும் கண்டிக்கப் படல் வேண்டும் என்பதனை வலியுறுத்துவதோடு, உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி சிறார்கள் மாணவர்களை குறைந்த பட்சம் எச்சரிக்கை செய்தாவது விடுவிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை வேண்டிக் கொள்கிறோம்.

முஸ்லிம் சமூகத்திற்கு இந்த கேடுகெட்ட கட்சி அரசியல் கொண்டுவரும் சாதனைகளை விட சோதனைகளே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன, அதேவேளை முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள ஏந்தவொரு சவாலையும் உரிய அரங்குகளில் சமாளிக்க வக்கில்லாது, அவற்றிற்கு முகம் கொடுக்க முடியாது..

பங்காளிச் சண்டைகளில் பிளவுபட்டு பிரிந்து நின்று கொழும்பில் சரணாகதி அரசியல் செய்யும் தலைமைகள் தேர்தல் காலங்களில் ஊருக்கு வந்து பாமார மக்களை உசுப்பேற்றி மோதவிட்டு, அவர்கள் மீது தமது அதிகார பலத்தை காட்டும் இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

-Inamullah Masihudeen-

7 comments:

  1. KEADU KETTU POAI VITTETHU ENATHU SAINTHAMARUTHU PALLIVAYEL NIRVAAHEM.
    THANIPPATE ILAFETHTHITKAHE ILEM VITHAIHELUKKU NANCHOOTTUHRETHU SAINTHAMARUTHU PALLIVAAYEL NIRVAAHEM.
    ORU SAMUHATHTHITKKAHE ORU SAMUTHAAYEMEA PALLETHTHIL VILAPPOHIRETHU.

    ITHU MATTUMEA UNMAI.

    ReplyDelete
  2. Saithamaruthu palli nirvaagamum itharkku mulupporuppu....!
    PLUS
    Hide & Seeek pannum siraazum Jameelum thaan 100% sooothirathaarigal

    ReplyDelete
  3. இனாமுல்லாஹ் அவர்களே, இந்த சாய்ந்தமருது பிரச்சினையை எல்லோரும் தங்களது அரசியல் இலாபம் கருதியே கையாள்கிறார்கள். எவருக்கும் நெஞ்சுரம் இல்லை அந்த சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் செய்யும் ஜனநாயக விரோதத்தையும், மரைக்கார் சபை என்ற பதவியை வைத்து நடத்தும் துஸ்பிரயோகத்தையும் (தொன்று தொட்டு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்கள் கடைபிடித்து வரும் அரசியல் நடுநிலைமை தன்மை), அராஜகத்தையும், காடைத்தனத்தையும், காவாலித்தனத்தையும் கண்டிக்க வக்கில்லாதவர்களாகவே உள்ளனர். இதட்கான முழுப்பொறுப்பையும் சாய்ந்தமருது நிர்வாகசய்யும் அதன் தலைவர் ஹனிபா மாஸ்டருமே பொறுப்பேற்க வேண்டும். இதில் கைது செய்யப்பட்டவர்களும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களும், இந்த வன்முறையை முன்னின்று நடத்தியர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதட்காக கட்சி பேதங்களை மறந்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும் கடுமையான அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாதிகளும், பொதுபல சேனாவும் செய்த வன்முறைக்கும் இந்த சாய்ந்தமருது காடையர்கள் செய்த வன்முறைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    இந்த சாய்ந்தமருது பிரதேசபை பிரச்சினை என்பது கல்முனை மக்களின் பிரச்சினை. இதை முழுமையாக கல்முனை மக்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு இந்த விடயத்தில் உள்ளது. இந்த விடயம் இரு ஊர்களும் கலந்துரையாடல் மூலம் இரு ஊர்களின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டிய விடயம். இந்த விடயத்தை அரசியல் கட்சிகளும், அரசியல் பினாமிகளும் தங்களுக்கு சார்பாக வாக்கு வங்கியை இலக்காக கொண்டு கல்முனை மாநகரத்துக்கு மாபெரும் சமூகத்துரோகத்தை செய்ய முட்பட்டுள்ளார்கள். இதில் ஹரீஸ் எம்பி மிகப்பெரும் பங்கை வகுத்துள்ளார். அரசியல் சிந்தனையற்ற, முஸ்லீம் சமூகத்தின் உரிமைபற்றிய கவலை அற்ற, அரசியல் வியாபாரி ஹக்கீமின் பொடுபோக்கும் மிகப்பெரும் காரணங்களாகும். இவை அனைத்தையும் தாண்டி சாய்ந்தமருது மரைக்கார் சபை இந்த பிரதேச வாதத்துக்கான, வன்முறைகளுக்கான, ஜனநாயக விரோத நடவெடிக்கைகளுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

    சாய்ந்தமருதில் சட்டமும், தனிமனித சுதந்திரமும், ஜனநாயகமும் பேணப்பட வேண்டும். இதட்கு எதிரானவர்களும், காரணகர்தாக்களும் ( மரைக்கார் சபை உட்பட) தயவு தாட்சண்ணியம் இன்றி சட்டத்தின் முன்னிறுத்தப்படவேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். இதட்காக இனாமுல்லாஹ் குரல் கொடுப்பாரா?


    ReplyDelete
  4. இனாமுல்லாஹ் அவர்களே, இந்த சாய்ந்தமருது பிரச்சினையை எல்லோரும் தங்களது அரசியல் இலாபம் கருதியே கையாள்கிறார்கள். எவருக்கும் நெஞ்சுரம் இல்லை அந்த சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் செய்யும் ஜனநாயக விரோதத்தையும், மரைக்கார் சபை என்ற பதவியை வைத்து நடத்தும் துஸ்பிரயோகத்தையும் (தொன்று தொட்டு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்கள் கடைபிடித்து வரும் அரசியல் நடுநிலைமை தன்மை), அராஜகத்தையும், காடைத்தனத்தையும், காவாலித்தனத்தையும் கண்டிக்க வக்கில்லாதவர்களாகவே உள்ளனர். இதட்கான முழுப்பொறுப்பையும் சாய்ந்தமருது நிர்வாகசய்யும் அதன் தலைவர் ஹனிபா மாஸ்டருமே பொறுப்பேற்க வேண்டும். இதில் கைது செய்யப்பட்டவர்களும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களும், இந்த வன்முறையை முன்னின்று நடத்தியர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதட்காக கட்சி பேதங்களை மறந்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும் கடுமையான அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாதிகளும், பொதுபல சேனாவும் செய்த வன்முறைக்கும் இந்த சாய்ந்தமருது காடையர்கள் செய்த வன்முறைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    இந்த சாய்ந்தமருது பிரதேசபை பிரச்சினை என்பது கல்முனை மக்களின் பிரச்சினை. இதை முழுமையாக கல்முனை மக்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு இந்த விடயத்தில் உள்ளது. இந்த விடயம் இரு ஊர்களும் கலந்துரையாடல் மூலம் இரு ஊர்களின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டிய விடயம். இந்த விடயத்தை அரசியல் கட்சிகளும், அரசியல் பினாமிகளும் தங்களுக்கு சார்பாக வாக்கு வங்கியை இலக்காக கொண்டு கல்முனை மாநகரத்துக்கு மாபெரும் சமூகத்துரோகத்தை செய்ய முட்பட்டுள்ளார்கள். இதில் ஹரீஸ் எம்பி மிகப்பெரும் பங்கை வகுத்துள்ளார். அரசியல் சிந்தனையற்ற, முஸ்லீம் சமூகத்தின் உரிமைபற்றிய கவலை அற்ற, அரசியல் வியாபாரி ஹக்கீமின் பொடுபோக்கும் மிகப்பெரும் காரணங்களாகும். இவை அனைத்தையும் தாண்டி சாய்ந்தமருது மரைக்கார் சபை இந்த பிரதேச வாதத்துக்கான, வன்முறைகளுக்கான, ஜனநாயக விரோத நடவெடிக்கைகளுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

    சாய்ந்தமருதில் சட்டமும், தனிமனித சுதந்திரமும், ஜனநாயகமும் பேணப்பட வேண்டும். இதட்கு எதிரானவர்களும், காரணகர்தாக்களும் ( மரைக்கார் சபை உட்பட) தயவு தாட்சண்ணியம் இன்றி சட்டத்தின் முன்னிறுத்தப்படவேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். இதட்காக இனாமுல்லாஹ் குரல் கொடுப்பாரா?

    ReplyDelete
  5. முப்பது வருட காலம் மக்களின் கோரிக்கைகளுக்கு மௌனமாய் செவி கொடுத்து,அரசியல் ஏமாற்றுக்காரர்களின் செயற்பாடுகள் யாவற்றையும் தாண்டி அவர்களின் பின்னால் அலைந்து திரிந்து கடைசியில் அவர்களின் உண்மையான நிலைமையை அறிந்த பின் தனது ஊரின் உரிமைக்காக முன் நிற்கும் ஒரு மிகப் பெரிய ஒரு நிறுவனத்தின் மீது அபாண்டம் சுமத்தும் , ஆதிக்க சக்திகள் இப்படியான நிலைமைக்கு வித்திட்ட அவர்களது செயற்பாடுகள் தொடர்பில், ஏனைய ஊர்களையும் இனத்தவரையும் தமக்கு அடிமை சேவகம் செய்வோராய் நடாத்துகின்ற முறைமை பற்றியும் சிறிது வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். தாங்கள் நடந்து கொண்ட முறைகள் பற்றி இலகுவில் மறைத்து விட்டு முழுவதும் மருதூர் பள்ளி மீது குற்றம் சாட்டும் நயவஞ்சகத் தனத்தை எப்படி விபரிப்பது என்று புரியவில்லை.

    ReplyDelete
  6. நிஜாமுதீன் அவர்களே, நீங்கள் சாய்ந்தமருத்துக்கு தனியான பிரதேச சபையோ, சுயாட்சியோ, தனிநாடோ கேளுங்கள் அதட்கான உரிமை உங்களுக்கு உண்டு. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் சட்டத்துக்கு புறம்பான வன்முறைகள், ஜனநாயக விரோத நடவடிக்கைள் நிறுத்தப்பட்டு, அந்த ஊரின் தனிமனித சுதந்திரம் நிட்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையால் மீறப்பட்டுள்ளது. அதட்கான சான்று அந்த சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையினால் அல்லது அவர்களது ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சாய்ந்தமருது நவம்பர் பிரகடனமாகும். உங்களை போன்ற பிரதேசவாத நோய் அந்த ஊரில் நிறைய பேருக்கு உண்டு. இது 100% பிரதேச வாதமாகும். கல்முனை மாநகரத்தில் உள்ள மற்ற ஊர் முஸ்லீம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை சிறு துளியும் கருத்தில் கொள்ளாமல் ஊர் வெறிபிடித்து, விசர்பிடித்து தாண்டவம் ஆடுகிறீர்கள். இந்த பண்பு முஸ்லிம்களுக்கு உரிய பண்பு அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சாய்ந்தமருதில் நடக்கும் கூத்துக்கள் உலகம் அறிந்த விடயம். இவை ஒன்றும் அபாண்டம் அல்ல. வாருவகட்டு எதிர்ப்பும், கல்லெறிகளும், வன்முறையும் இறுதினங்களுக்கு முன் சாய்ந்தமருதில் நடந்தேறியது. இதுதான் சாய்ந்தமருது முஸ்லிம்களின் பண்பா என்று கேட்க விரும்புகிறோம். உங்கள் எதிர்ப்பையும், உங்கள் ஒற்றுமையையும் மிகவும் காத்திரமாக வாக்குகள் மூலம் வெளிப்படுத்தலாமே. மாபெரும் அரசியல் சக்தியாக இருந்த ராஜபக்ச எப்படி ஆட்சியில் இருந்து அக்கட்டப்பட்டார் என்பததையும் உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    " ஒழிக அராஜகம்" " ஒழிக வன்முறை கலாச்சாரம்" "ஒழிக ஜனநாயக விரோத செயட்பாடுகள்" " ஒழிக நம்பிக்கையாளர் சபையின் துஸ்பிரயோகம்" " மலர்க சாய்ந்தமருது பிரதேச சபை ஜனநாயக முறையில்"

    ReplyDelete
  7. நிஜாமுதீன் அவர்களே, நீங்கள் சாய்ந்தமருத்துக்கு தனியான பிரதேச சபையோ, சுயாட்சியோ, தனிநாடோ கேளுங்கள் அதட்கான உரிமை உங்களுக்கு உண்டு. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் சட்டத்துக்கு புறம்பான வன்முறைகள், ஜனநாயக விரோத நடவடிக்கைள் நிறுத்தப்பட்டு, அந்த ஊரின் தனிமனித சுதந்திரம் நிட்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையால் மீறப்பட்டுள்ளது. அதட்கான சான்று அந்த சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையினால் அல்லது அவர்களது ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சாய்ந்தமருது நவம்பர் பிரகடனமாகும். உங்களை போன்ற பிரதேசவாத நோய் அந்த ஊரில் நிறைய பேருக்கு உண்டு. இது 100% பிரதேச வாதமாகும். கல்முனை மாநகரத்தில் உள்ள மற்ற ஊர் முஸ்லீம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை சிறு துளியும் கருத்தில் கொள்ளாமல் ஊர் வெறிபிடித்து, விசர்பிடித்து தாண்டவம் ஆடுகிறீர்கள். இந்த பண்பு முஸ்லிம்களுக்கு உரிய பண்பு அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சாய்ந்தமருதில் நடக்கும் கூத்துக்கள் உலகம் அறிந்த விடயம். இவை ஒன்றும் அபாண்டம் அல்ல. வாருவகட்டு எதிர்ப்பும், கல்லெறிகளும், வன்முறையும் இறுதினங்களுக்கு முன் சாய்ந்தமருதில் நடந்தேறியது. இதுதான் சாய்ந்தமருது முஸ்லிம்களின் பண்பா என்று கேட்க விரும்புகிறோம். உங்கள் எதிர்ப்பையும், உங்கள் ஒற்றுமையையும் மிகவும் காத்திரமாக வாக்குகள் மூலம் வெளிப்படுத்தலாமே. மாபெரும் அரசியல் சக்தியாக இருந்த ராஜபக்ச எப்படி ஆட்சியில் இருந்து அக்கட்டப்பட்டார் என்பததையும் உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    " ஒழிக அராஜகம்" " ஒழிக வன்முறை கலாச்சாரம்" "ஒழிக ஜனநாயக விரோத செயட்பாடுகள்" " ஒழிக நம்பிக்கையாளர் சபையின் துஸ்பிரயோகம்" " மலர்க சாய்ந்தமருது பிரதேச சபை ஜனநாயக முறையில்"

    ReplyDelete

Powered by Blogger.