Header Ads



மைத்திரி டபள் கேம் ஆடுகிறாரா..?

தற்போதைய அரசியல் நிலைமை கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோருடன் நேற்று முன்னிரவுநீண்ட மந்திராலோசனை நடத்தியுள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரொருவர் அரசியலில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை குறித்து இதன்போது விரிவாக பேசப்பட்டது எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டரசு தொடர்புகளை உடனடியாகத் துண்டித்துக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துணியுமாயின் பொது எதிரணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசொன்று அமைய முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று இந்தக் கூட்டத்தின்போது பொது எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதன்போது புதிய அரசொன்றை அமைப்பது தொடர்பில் தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கும் நிலைவரம் குறித்து இருவரும் நீண்டநேரம் பேச்சு நடத்தினர் என்று அறியமுடிகின்றது. தனி ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக கோரிக்கையொன்றை விடுத்திருப்பதால் அது குறித்தும் பரிசீலனை நடத்தவேண்டியிருப்பதாக இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார் என்று மேலும் அறியவந்தது.

3 comments:

  1. பொறுத்திருந்து பாருங்கள் - டபள் என்ன றிபிள் கேமும் ஆடும் மனோநிலை படைத்தவரே நமது மேன்மை

    ReplyDelete
  2. இது டபிள் கேம் கிடையாது. இதுதான் இலங்கையின் அரசியல் விளையாட்டு. இந்த விளையாட்டில் இவர்களுக்கு நாட்டை பற்றிய எந்த கவலையும் கிடையாது. ரணிலும் மைத்திரியும் ( UNP + SLFP) தொடர்ந்து பயணிக்க முடியாது. ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தி அரசியலை முன்னெடுக்கும் விளையாட்டில் முனைப்பு காட்டுவதே இந்த அரசியல் குழப்பம். மைத்திரி தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டுமானால் நிட்சயமாக ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுக்க பட வேண்டும். ராஜபக்ச களத்தில் இருந்தால் SLFP இரண்டாக பிரிந்தால் தனக்கு சாதமாக இருக்கும் என ரணிலின் கணக்கு. ராஜபக்ச அன் கோ UNP இல் குழப்பத்தை ஏட்படுத்தி ரணிலை அகற்ற முற்படுகிறார்கள்.
    எது எப்படி இருந்தாலும் இந்த அரசாங்கம் சில அமைச்சுக்களில் மாற்றத்தை ஏட்படுத்தி முன்செல்லும், இல்லாவிட்டால் ஒரு குரூப் SLFP இல் இருந்து பிரிந்து வந்து ரணிலுடன் ஆட்சி அமைக்கும் (இதுதான் ரணிலின் main focus ) என்பதே களநிலவரமாகும் என்பது எமது .கணிப்பாகும்.

    ReplyDelete
  3. இது டபிள் கேம் கிடையாது. இதுதான் இலங்கையின் அரசியல் விளையாட்டு. இந்த விளையாட்டில் இவர்களுக்கு நாட்டை பற்றிய எந்த கவலையும் கிடையாது. ரணிலும் மைத்திரியும் ( UNP + SLFP) தொடர்ந்து பயணிக்க முடியாது. ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தி அரசியலை முன்னெடுக்கும் விளையாட்டில் முனைப்பு காட்டுவதே இந்த அரசியல் குழப்பம். மைத்திரி தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டுமானால் நிட்சயமாக ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுக்க பட வேண்டும். ராஜபக்ச களத்தில் இருந்தால் SLFP இரண்டாக பிரிந்தால் தனக்கு சாதமாக இருக்கும் என ரணிலின் கணக்கு. ராஜபக்ச அன் கோ UNP இல் குழப்பத்தை ஏட்படுத்தி ரணிலை அகற்ற முற்படுகிறார்கள்.
    எது எப்படி இருந்தாலும் இந்த அரசாங்கம் சில அமைச்சுக்களில் மாற்றத்தை ஏட்படுத்தி முன்செல்லும், இல்லாவிட்டால் ஒரு குரூப் SLFP இல் இருந்து பிரிந்து வந்து ரணிலுடன் ஆட்சி அமைக்கும் (இதுதான் ரணிலின் main focus ) என்பதே களநிலவரமாகும் என்பது எமது .கணிப்பாகும்.

    ReplyDelete

Powered by Blogger.