Header Ads



பிரதமர் விலகாவிட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் - கம்பன்பில

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லாதுபோனால் அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் அரசியல் நடவடிக்கை மூலம் அவரை பதவி நீக்குவதற்கான வேலைத்திட்டங்களை  முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறும் அதனைச் செய்ய முடியாவிடத்து நாட்டில் மக்கள் போராட்டம் வெடிப்பதை தவிர்க்க முடியாதென பிவிதுறு ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதைனத் தெரிவித்தார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் பாராளுமன்றம் இன்று கூடியுள்ளது. பிரதமர் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பம், அமைச்சரவை கலையும் சந்தர்ப்பம் மற்றும் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகும் சந்தர்ப்பம் பற்றி அரசியலமைப்பின் 46 (2) உறுப்புரை சுட்டிக்காட்டுகிறது.

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கி மக்கள் சுதந்திரக் முன்னணி என்பன தற்போதைய நிலையில் விலகியுள்ளன. ஆகவே தேசிய அரசாங்கம் இல்லாது போயுள்ளது. தேசிய அரசாங்கம் நடைமுறையில் இல்லாத சந்தர்ப்பத்தில்  அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதனைவிடுத்து அமைச்சர்ளின் எண்ணிக்கையை நாற்பத்தெட்டாக தொடரமுடியாது. எனவே 48  பேரைக் கொண்ட அமைச்சரவை கலைந்தவுடன் பிரதமர் பதவி வெற்றிடமாகும். ஆகவே தற்போதைய நிலையில் உத்தியோகபூர்வமாக அமைச்சரைவயும் இல்லை. பிரதமரும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

(எம்.சி.நஜிமுதீன்)

2 comments:

Powered by Blogger.