February 05, 2018

ஹிஸ்புல்லாவுக்கு இது தெரியுமா..?

200 விகாரைகள் அமைக்க பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா தெரிவித்துள்ளார்.

மண்முனை தென்எருவில் பற்று தேற்றாத்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் தி.தேவறஞ்சன் தலைமையில் தேற்றாத்தீவு கிராமத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் கட்டளைத் தளபத்தியாக இருக்கும்போது 40000 போராளிகள் எனக்குக் கீழ் இருந்தார்கள். அதிலே 11000 பெண் போராளிகள். இவர்களை வைத்து போரிட்டவன்தான் மட்டக்களப்பான்.

அப்போது எமது வீரத்தைக் காட்டியிருந்தோம். 300 பேருடன் போய் 24 மணி நேரத்தில் ஆனையிறவு படை முகாமை கைப்பற்றினேன். எனது இந்த வெற்றியை தலைவர் பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை. அந்த சண்டையில் 18 பேர் வீரச்சாவடைந்தும், 70 பேர் காயப்பட்டும் இருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தற்போது பலர் வெளியேறி இருக்கின்றனர், இவ்வாறு கூட்டமைப்புக்குள் நடைபெறும் என எனக்கு நன்கு தெரியும். சம்மந்தன் ஐயா ஓய்வெடுத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றுமுழுதாக சிதறிப்போய்விடும். அக்கூட்டமைப்புக்குள் தமிழ் உணர்வாளர்கள் ஒருவரும் இல்லை. இதனை அறிந்துதான் நான் ஒரு தமிழ் கட்சியை ஆரம்பித்திருக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோய்விட்டது. ஆனால் தற்போது அக்கூட்டமைப்பிலுள்ளவர்கள், கோடீஸ்வரர்களாக இருந்து மாளிகைகளை கட்டிக்கொண்டுள்ளார்கள்.

நாங்கள் போராடியபோது அந்தப் போராட்டத்திற்கு பயந்து தப்பி ஓடிய அரியநேத்திரன், இராணுவத்திற்குக் காட்டிக் கொடுத்த யோகேஸ்வரன், போன்றோர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள். இதனைச் செய்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது அவர்களுக்கு.

இரத்த ஆற்றை ஓட வைத்தவன் நான் ஆனால் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஹிஸ்பல்லாவுக்கு இது தெரியுமா? என அவர் தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

Mr.கருணா அம்மன் அவர்களே நீங்கள் செய்தலற்றையெல்லாம் நாம் அறிவோம்.

தான் ஒரு முன்னாள் கொலைகாரன் என்பதை பகிரங்கமாக இந்த நாய் ஒத்துக்கொள்கின்றான். இதற்கு முதுகெலும்பில்லாத முஸ்லீம் அரசியல் கோழைகளின் எதிர் நடவடிக்கை என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

"இந்த நாட்டில் இரத்த ஆறை ஓட வைத்தவன் நான்" என்று பகிரங்கமாக சொல்லும் இந்த கருணா பயங்கரவாதியை சிறையில் அடைத்து தூக்கில் தொங்கவிட சட்டத்தால் முடியாதா? நமது முஸ்லீம் சட்டத்தரணிகளாவது முயற்சிக்க கூடாதா?

Post a Comment