Header Ads



"நாட்டில் அராஜக நிலை, உருவாகலாமென எச்சரிக்கை"

-Dc-

“மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தந்திரம் மிக்கவர் எனவும் அவர் மோட்டுத்தனமாக நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் நிலையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார்.

நாட்டு அரசியலில் தற்பொழுது தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ யாரு அரசியல் செய்தாலும் பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில், அவர் இப்பொழுது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை அமைத்தால், அவருக்கு பெரும்பான்மைப் பலம் இல்லை. அத்துடன், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதை அவர் நன்கு அறிந்துள்ளார்.

இதனால், அதிகாரத்துக்கு வர விரும்பும் எவரும் நாடு இருக்கும் நிலையில் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.

தற்பொழுதுள்ள நிலையிலேயே அரசாங்கம் செல்லுமானால், நாட்டில் அராஜக நிலைமையொன்று உருவாகும் என்பது தவிர்க்க முடியாது. இது நாட்டுக்கு சிறந்ததல்ல. இதுவே எனது அறிவுக்கு எட்டிய இந்த அரசியல் நிலவரத்தின் நோக்காகும் எனவும் அவர் மேலும் கூறினார். 

No comments

Powered by Blogger.