Header Ads



மைத்திரி - ரணில் இரகசிய பேச்சு, தனித்து ஆட்சியமைக்க ரணில் முஸ்தீபு

-D/C-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோக வெயியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைத்துச் செயற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தைகள் தற்பொழுது நடைபெற்று வருத்தாகவும், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று இரவு நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பாரிய வீழிச்சி கண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சகள் சிலர், அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜனாமா செய்து, பொதுஜன பெரமுனவுடன் இணையாகவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமிருந்து பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தையும், எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனித்து ஆட்சி நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் உட்படக் குழுவினர் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கமைய ஜனாதிபதி நேற்றைய தினம் கூறியதுபோன்று இன்னும் ஓரிரு தினங்களில் நாட்டில் பாரிய அரசியல் மாற்றமொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிந்து தெரியவந்துள்ளது

2

ஐக்கிய தேசிய கட்சி தனியான ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் உட்பட குழுவினர் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நடைமுறையிலுள்ள தேசிய அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய 107 உறுப்பினர்களை கொண்டுள்ளது. தனித்து ஆட்சி அமைக்க மேலும் 7 ஏழு உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர்.

ஏழு உறுப்பினர்களை எவ்வாறு கட்சிக்குள் உள்வாங்குவது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

19ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் 46 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சரவையின் முழு எண்ணிக்கை 30யை கடக்கும் ஒப்பந்தத்தின் கீழ் அமைச்சரவையை நியமிக்குமாறு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலில் தமது தொகுதிகளில் தோல்வியடைந்த அமைச்சர்களுக்கு அமைச்சு பதவி வழங்க கூடாதென இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.(

No comments

Powered by Blogger.