Header Ads



எந்த கட்சிக்கும், ஆதரவு வழங்கப்படமாட்டாது - அனுரகுமார

கூட்டு அரசாங்கம் அமைக்க எந்த கட்சிக்கும் ஒத்துழைப்பு வழங்க எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று  -15- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மக்கள் எதிர்பார்த்த அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற, தமது கட்சியை வலுப்படுத்துவதன் மூலமே முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சிக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் வாக்களித்துள்ளனர்.

அவர்களின் கருத்திற்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

அதன்படி, கூட்டு அரசாங்கம் அமைக்க எந்த  கட்சிக்கும் ஆதரவு வழங்க முடியாது.

அதுபோல், நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளின் முடியுகளின் படி, ஜனாதிபதிக்கு தனித்தோ பிரதமருக்கு தனித்தோ அல்லது இருவருக்கும் இணைந்தோ ஆட்சியை கொண்டுச் செல்ல எந்த தகுதியும் இல்லை என்று மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி 8ஆம் திகதியின் படி மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்ல ஜே.வி.பி சார்த்த கட்சிக்கும் மக்கள் இயக்கத்திற்கும் மாத்திரமே முடியும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இலங்கை அரசியலில் இவர்கள் நீதிபதிகள் போன்றவர்கள்.  இவர்களது கருத்துக்கள் மனச்சாட்சியைத் தொடக்கூடியவை.

    ReplyDelete

Powered by Blogger.