Header Ads



நான் இலங்கைக்கு வரமாட்டேன் - அர்ஜூன மகேந்திரன்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக அர்ஜூன மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ள நிலையில்,

அவரை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜனரத்ன கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தார். அவருக்காக 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது சிங்கபூரில் உள்ள அவர் இதுவரையில் நாடுதிரும்பவில்லை.

இந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரன் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்தால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால், விமான நிலையத்தில் வைத்து அவரைக் கைதுசெய்ய முடியும் என சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரை நீதவான் முன்னிலையில், பிரசன்னப்படுத்தினால், பிரதான சந்தேகத்துக்குரியவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் இவருக்கும் அதுவே முடிவாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தாம் இலங்கைக்கு வரப்போவதில்லை என அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஒருவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் இலங்கையும் சிங்கப்பூரும் இது தொடர்பில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடாத காரணத்தினால் இரு தரப்பினரும் குறித்த விடயத்தில் உடன்பட முடியாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

எனினும், அவரைக் கையளிப்பதா? இல்லையா? என்தை சிங்கப்பூர் அரசாங்கமே தீர்மானிக்கும். இதேவேளை சிங்கப்பூரில் உள்ள மேல்நீதிமன்றில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்க முடியும்.

எனினும், சிங்கப்பூர் அரசாங்கம் இந்த விடயத்தில் பின்னிற்குமாயின் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இலங்கையில் வழக்கு விசாரணை நடத்தி அதன் இறுதி முடிவை சிங்கப்பூருக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த முடிவை சிங்கப்பூர் நீதிமன்றின் ஊடாக உறுதிப்படுத்தி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஊடாக தண்டனை வழங்க முடியும் என சட்டத்தரணி பிரதிபா மஹநாமஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உமது மச்சான் ரணிலிடம் சொல்லிவிட்டுப் போனீரா? சிங்கப்பூர் பிரதமர் இங்கு வந்தபோது கொடுத்த வேண்டுகோள்தான் எனது மச்சானைக் காப்பாற்றுங்கள். அந்த ரணில் மச்சானின் வேண்டுகோளை சிங்கப்பூர் பிரதமர் மறுக்கவில்லை. எனவே பிரச்னையில்லை மச்சான் அங்கேயே நீர் இரும். பொதுமக்களின் பணத்தைசூறையாடியமைக்கு எப்போது சரி அல்லாஹ்வின் தண்டனை உமக்கு நிச்சியம் வரும் என்பதில் மாத்திரம் எமக்கு பொதுமக்கள் என்றவகையில் ஒரளவு நிம்மதி.அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.