Header Ads



கலவரம் வெடிக்கும், ஜனாதிபதிக்கு முஜீபுர் ரஹ்மான் எச்சரிக்கை

நேர்கண்டவர்: எஸ்.என்.எம்.ஸுஹைல்

உள்¬ளூ¬ராட்சி தேர்தல் பிர¬சார நட¬வ¬டிக்¬கைகள் இறு¬தி¬கட்¬டத்தை அடைந்¬தி¬ருக்¬கி¬றது. ஐ.தே.க.வுக்¬கான வெற்¬றி¬வாய்ப்பு எவ்¬வா¬றி¬ருக்¬கி¬றது?

ஐக்¬கிய தேசியக் கட்¬சியின் உள்¬ளூ¬ராட்சி தேர்தல் கொள்கை மற்றும் அபி¬வி¬ருத்தித் திட்¬டங்¬களை முன்¬வைத்து நாம் பிர¬சா¬ரங்¬களை முடக்¬கி¬விட்¬டி¬ருக்¬கிறோம். இம்¬முறை அதி¬க¬மான சபை¬களை வெற்¬றி¬கொள்ளும் வாய்ப்பு கூடு¬த¬லாக இருக்¬கின்¬றது. நாட¬ளா-விய ரீதி¬யி¬லான தேர்தல் பிர¬சார கூட்¬டங்¬களின் மூலம் இது தெட்¬டத்¬தெ¬ளி¬வாக விளங்-கு¬கின்¬றது.

ஆனால், சில கருத்¬துக்¬க¬ணிப்¬பு¬களின் அடிப்¬ப¬டையில் 40 வீதத்¬திற்கும் குறை¬வான வாக்¬கு¬களே ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் என கூறப்¬ப¬டு¬கின்¬றதே?

இது நாட்டின் ஆட்¬சியை தீர்¬மா¬னிக்கும் தேர்தல் அல்ல. பொது¬வா¬கவே உள்¬ளூ¬ராட்சி தேர்¬தலில் 55 தொடக்கம் 60 வீத¬மான வாக்¬கு¬களே பதி¬யப்¬படும். அவ்¬வாறு பதி¬யப்¬படும் 60 வீத¬மான வாக்¬கு¬களின் யானை சின்¬னத்¬திற்கு 40 வீத¬மான வாக்¬குகள் கிடைக்கும். வாக்¬க¬ளிப்பு வீதத்தை கூட்டி எமது வாக்¬கு¬வங்¬கியை அதி¬க¬ரிக்கச் செய்¬யவே பாடு¬ப¬டு-கின்றோம்.

தேர்தல் பிர¬சா¬ரங்கள் இறு¬தி¬கட்¬டத்தை அடைந்¬தி¬ருக்¬கின்ற நிலையில் வாக்¬கா¬ளர்கள் வாக்¬க¬ளிப்பு முறைமை குறித்து தெளி¬வில்¬லாமல் இருக்¬கின்¬ற¬னரே?

இலங்¬கையை பொறுத்¬த¬வரை அடிக்¬கடி தேர்தல் நடப்¬பது எல்¬லோ¬ருக்கும் தெரியும். எனவே, மக்¬க¬ளுக்கு சிறந்த முறையில் தேர்தல் அறிவு இருக்¬கி¬றது. எனவே வாக்¬க-ளிப்பில் சிக்கல் இருக்¬காது. விருப்பு வாக்¬கு¬முறை நீக்¬கப்¬பட்¬டி¬ருக்¬கின்¬றமை வாக்¬க¬ளிப்-புக்கு மிகவும் இல¬கு¬வா¬கவே இருக்கும்.

ஐக்¬கிய தேசி¬யக்¬கட்சி நாட¬ளா¬விய ரீதியில் முஸ்லிம் கட்¬சி¬க¬ளு¬டனும், மலை¬யக தமிழ் கட்¬சி¬க¬ளு¬டனும் ஜாதிக ஹெல உறு¬ம¬ய¬வு¬டனும் கூட்டு சேர்ந்து ஐக்¬கிய தேசிய முன்¬ன¬ணி¬யாக யானை சின்¬னத்தில் போட்¬டி¬யி¬டு¬கின்¬றது. இந்¬நி¬லையில், சில இடங்-களில் கூட்¬டுக்¬கட்¬சிகள் ஐ.தே.கவையும் தலை¬மை¬யையும் விமர்¬சிக்¬கின்¬ற¬னவே?

பாரா¬ளு¬மன்றில் ஐ.தே.க.வுடன் இணைந்¬துள்ள கட்¬சி¬க¬ளிடம் "ஐ.தே.மு." ஊடாக தேர்¬த-லில் கள¬மி¬றங்க வரு¬மாறு பிர¬தமர் கோரினார். இவ்¬வாறு கூட்¬டணி சேர்ந்¬த¬போது சில கட்¬சி¬க¬ளுடன் ஆசன ஒதுக்¬கீட்டில் முரண்¬பாடு ஏற்¬பட்¬டது. இதனால், அவர்கள் சில இடங்¬களில் எம்¬முடன் கூட்டு சேர்ந்து யானை சின்¬னத்¬திலும் தனித்து வேறு சின்¬னங்¬க-ளிலும் போட்¬டி¬யி¬டு¬கின்¬றனர். 

அர¬சாங்¬கத்தில் எம்¬மோடு இருக்¬கின்¬ற¬வர்கள் சில இடங்¬களில் வாக்கு வேட்¬டைக்¬காக ஐக்¬கிய தேசியக் கட்¬சியை விமர்¬சித்¬தா¬லே அவர்¬க¬ளுக்கு வாக்கு கிடைக்கும் என நம்¬பு-கின்¬றனர். இது அர்த்¬த¬மில்¬லாத விமர்¬ச¬னங்கள் என்¬பதை மக்கள் புரிந்¬து¬கொள்வர். அரசில் இருந்¬து¬கொண்டு அமைச்¬சுப்¬ப¬த¬வியை வகித்¬துக்¬கொண்டு விமர்¬சிப்¬பது குறித்து அவர்¬கள்தான் பதில் கூற வேண்டும். யானை சின்¬னத்தில் போட்¬டி¬யிடும் இடங்¬களில் அவர்கள் என்ன கூறு¬கின்¬றனர் என்¬ப¬தையும் மக்கள் பார்த்¬துக்¬கொண்¬டி¬ருக்¬கின்¬றனர். இது ஐ.தே.க.வை எவ்¬வி¬தத்¬திலும் பாதிக்¬காது. அந்த தலை¬மை¬களில் இரட்டை வேடம் அம்¬ப¬ல¬மா¬கி¬யி¬ருக்¬கி¬றது என்¬பதை மக்கள் அறி¬வார்கள்.

கூட்டு எதி¬ரணி பிணைமுறி¬ வி¬வகா¬ரத்தை தேர்தல் பிர¬சா¬ரமாக முடுக்¬கி¬விட்¬டுள்¬ள-னரே? ஐ.தே.க. வுக்கு இது பெரும் சரிவை ஏற்¬ப¬டுத்¬து¬மல்¬லவா?

பிணை முறி விவ¬காரம் இது ஐ.தே.க.வுடன் மட்டும் சம்¬பந்¬தப்¬பட்ட விட¬ய¬மல்ல. இந்த அர¬சாங்¬கத்¬திற்கு கரும் புள்¬ளியே. இந்த குற்¬றச்¬செயல் குறித்து அர¬சாங்கம் விசா¬ரணை மற்றும் சட்ட நட¬வ¬டிக்¬கைக்கு சென்¬ற¬மை¬யா¬னது ஒரு சிறந்த விட¬ய¬மாக பார்க்¬கப்¬ப¬டு-கின்¬றது. கடந்த அர¬சாங்¬கங்¬களை போன்¬றல்¬லாது, கட்சி நலனை பாது¬காத்து குற்-றத்தை மூடி மறைக்¬காது விசா¬ர¬ணைக்கு சென்¬ற¬மையால் ஐ.தே.க. குறித்து மக்¬க¬ளுக்கு மேலும் நம்¬பிக்கை ஏற்¬பட்¬டி¬ருக்¬கி¬றது என்ற கூற¬வேண்டும்.

ஜனா¬தி¬ப¬தி¬யாக இருந்த காலத்தில் தனது கையில் அமைச்¬சர்¬களின் பைல்கள் இருக்-கின்¬றது என மஹிந்த தெரி¬வித்தார். அதற்கு எந்த நட¬வ¬டிக்¬கையும் எடுக்¬கப்¬ப¬ட-வில்லை. அத்¬துடன், கடந்த அர¬சாங்¬கத்தில் இடம்¬பெற்ற மோச¬டிகள் பல இன்னும் கிடப்பில் இருக்¬கின்ற நிலையில் சட்ட ஆட்¬சியை நிறுவும் ஐ.தே.க.வின் இந்த அர¬சியல் கலா¬சா¬ரத்¬தையே மக்கள் விரும்¬பு¬கின்¬றனர்

நீங்கள் கொண்¬டு¬வந்த ஜனா¬தி¬ப¬தியே இப்¬போது ஐ.தே.க.வை வீழ்த்தும் வகையில் பிர-சா¬ரங்¬களை முன்¬னெ¬டுத்து வரு¬கின்¬றாரே?


நாட்டின் ஜனா¬தி¬ப¬தி¬யுடன் நாம் அர¬சாங்¬கத்தை கொண்டு நடத்¬து¬கின்றோம். இந்¬நி-லையில் அவரை அநா¬வ¬சி¬ய¬மாக விமர்¬சிக்கக் கூடா¬தென ஐ.தே.க. தலை¬வரும் பிர¬த¬ம-ரு¬மான ரணில் விக்¬கி¬ரம சிங்க எம்மை அறி¬வு¬றுத்¬தி¬யி¬ருந்தார். ஆனால், ஜனா¬தி¬ப¬தி-யுடன் இருக்கும் முக்¬கிய அமைச்¬சர்கள் சிலர் ஐ.தே.க.வை சீண்¬டி¬யதால் ஓரிரு ஐ.தே.க. வினர் எதிர் கருத்¬துக்¬களை முன்¬வைத்¬தி¬ருந்¬தனர். இது குறித்து பின்¬வ¬ரிசை ஐ.தே.க. எம்.பி.க்கள் ஜனா¬தி¬ப¬தி¬யிடம் முறை¬யிட்டோம். நாம் ஜனா¬தி¬ப¬தியை விமர்¬சிப்¬பதை நிறுத்¬தி¬யி¬ருக்¬கிறோம். ஜனா¬தி¬ப¬தியும் அவ¬ரது தரப்பும் ஐ.தே.க. மீது குற்¬றச்¬சாட்¬டு¬களை அடுக்கிக் கொண்டு செல்¬கின்¬றனர். ஐ.தே.க. வை விமர்¬சிப்¬ப¬தி¬னூ¬டாக மஹிந்த தரப்-புக்கு செல்லும் சுதந்திக் கட்சி வாக்¬கு¬களை கொள்¬ளை¬ய¬டிக்க திட்¬ட¬ம் வகுத்¬தி¬ருப்¬ப¬தா-கவே தோன்¬று¬கின்¬றது. 

தேர்¬தலின் பின்னர் சுதந்¬திரக் கட்சி ஆட்¬சியை கொண்¬டு¬வ¬ரப்¬போ¬வ¬தாக ஜனா¬தி¬பதி கூறு¬கின்¬றாரே? ஐ.ம.சு.கூ.விடம் 96 ஆச¬னங்¬கள்தான் இருக்¬கி¬ன்றன. ம.வி.மு., த.தே.கூ. ஒரு¬போதும் மஹிந்த தரப்¬புக்கு ஆத¬ர¬வ¬ளிக்க மாட்டோம் என கூறி¬யி¬ருக்¬கி¬றதே. இந்¬நி-லையில் ஐ.தே.மு.யிலுள்ள முஸ்லிம் கட்¬சி¬களும் மலை¬யக கட்¬சி¬களும் ஜனா¬தி¬ப¬திக்கு ஆத¬ர¬வ¬ளிக்க வாய்ப்பு இருக்¬கி¬றதா?

2015 ஆம் ஆண்டு ஜனா¬தி¬பதி தேர்¬த¬லின்¬போது, மைத்¬தி¬ரி¬பால சிறி¬சேன ஜனா¬தி¬ப¬தி-யாக இருப்¬ப¬தற்கும் பிர¬த¬ம¬ராக ரணில் விக்¬கி¬ரமசிங்க இருப்¬ப¬தற்¬குமே மக்கள் தமது ஆணையை வழங்¬கி¬யி¬ருந்¬தனர். இதற்கு மாற்¬ற¬மாக ஜனா¬தி¬பதி செயற்¬படப் போகி-றாரா? என்ற கேள்வி எழு¬கின்¬றது. மக்கள் தீர்ப்பை மீறி ஜனா¬தி¬பதி செயற்¬பட்டால் நாட்டில் சிவில் கல¬வ¬ர¬மொன்று ஏற்¬பட வாய்ப்¬பி¬ருக்¬கி¬றது.

அத்¬துடன், மஹிந்த இருக்கும் அந்த கூட்¬ட¬ணியில் இந்த முஸ்லிம் கட்¬சி¬களும் மலை-யக கட்¬சி¬களும் இணை¬யப்¬போ¬கி¬ன்றதா? இதனை மக்கள் ஏற்¬றுக்¬கொள்¬வார்¬களா? ஒரு-போதும் அது நடக்¬காது என நம்¬பலாம்.

முஸ்லிம் பிர¬தே¬சங்¬களில் ஐ.தே.க. வுக்கு எவ்¬வா¬றான வர¬வேற்பு இருக்¬கி¬றது?

நான் நாடுமுழுதும் முஸ்லிம் பிர¬தே¬சங்¬க¬ளுக்கு அண்¬மைக்¬கா¬ல¬மாக  சென்¬றி¬ருந்-தேன். ஐ.தே.க.வின் ஆதரவு பல முஸ்லிம் பிர¬தே¬சங்¬களில் அதிகரித்துக் காணப்¬ப¬டு-கின்¬றது.
யானை சின்¬னத்தில் வேறு கட்சி வேட்¬பா¬ளர்¬க¬ளுக்கு இடமளித்திருக்கின்றமையால், ஐ.தே.க. முஸ்லிம் உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனரே?

உண்மையிலேயே எமது கட்சியினருக்கு தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பு இல்லாமல் போனது கவலை தான். இதனால் எமது கட்சிக் காரர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது. எனவே, பல பிரதேசங்களில் ஐ.தே.க. உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர். தற்போதைய அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டே இக்கூட்டு ஏற்படுத்தப்பட்டது. எதிர்வரும் காலங்களில் அப்படி கூட்டணிசேராது தனியே ஐ.தே.க.போட்டியிடக்கூடியவாறு நிலைமைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கட்சித் தலைமையும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
**********

No comments

Powered by Blogger.