February 23, 2018

அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டது..!

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிறு வரை பிற்போடப்படலாம் என்று அரசாங்கத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை உத்தேசிக்கப்பட்டிருந்த அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்தது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிகளின் உட்பூசல்கள் காரணமாக அமைச்சரவை மாற்றம் எதிர்பார்த்த அளவு இலகுவான விடயமாக இருக்கவில்லை.

இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னர் அரசாங்கத் தரப்புக்குள் கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று -23- மாலை எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment