Header Ads



மஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க - ஜனா­தி­பதி கூறுகிறார்


முன்­னைய ஆட்­சியின் ஊழல் குற்­ற­வா­ளிகள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­கூறி நான் தெரி­வித்­துள்ள போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவுடன்  தொடர்­பு­பட்ட  ஊழல் குறித்து நட­வ­டிக்கை எடுக்கும் அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­டமே உள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். ராஜபக் ஷக்­களை ஐக்­கிய தேசியக் கட்­சினர் காப்­பாற்­று­வ­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த போது  மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் அடுத்­த­கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நகர்­வுகள் குறித்து கேள்வி எழுப்­பிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில். 

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் நட­வ­டிக்­கைளில் எனது சார்பில் என்னால்  எடுக்க முடிந்த சகல நகர்­வு­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கிறேன்.  சட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய நான் செயற்­பட்டு வரு­கின்றேன். ஆணைக்­குழு அறிக்­கைக்கு அமைய அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து இப்­போது வரையில் மூன்று சந்­திப்­பு­களை உரிய நபர்­க­ளுடன் நடத்­தி­யுள்ளேன்.  அது தொடர்பில் ஆராய்ந்து செயற்­பட்டு வரு­கின்றேன். இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்­ட­மூ­லத்தை திருத்த வேண்­டிய தேவை உள்­ளது. அதே­போன்று   ஆணைக்­குழு அறிக்கை வெளி­வர முன்­னரே எனது செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. நிலை­மைகள் குறித்து நான் நன்­றாக அறிந்­து­கொண்டேன். ஆகவே சட்­டங்­களில் திருத்­தங்­களை முன்­னெ­டுக்கும் சட்ட ஆலோ­ச­னை­களை நான் ஆரம்­பத்தில் இருந்தே பெற்று வந்­துள்ளேன். கடந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் நீதி சார் நகர்­வுகள் குறித்து தீர்­மானம் எடுத்­துள்ளேன். இரண்டு கிழ­மைக்கு ஒரு­தரம் நான் சட்ட வல்­லு­னர்­களை சந்­தித்து அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­களை கையாண்டு வரு­கின்றேன். 

கேள்வி:- முன்­னைய ஆட்­சியில் ராஜபக் ஷக்­களின் ஊழல்கள் குறித்து குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன, ஆயினும் ஏன் பொதுப்­ப­டை­யாக  அவர்­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தாமதம் ? 

பதில்:- இதில் முழு­மை­யான பொறுப்­பையும் இந்த ஊழல்கள் குறித்து தொடர்­பு­டைய  அமைச்­சர்கள்  பொறுப்­பேற்க வேண்டும். சட்டம், நீதி, பொலிஸ் ஆகி­ய­வற்­றிற்கு பொறுப்­பான அமைச்­சர்கள் இதற்கு பொறுப்­பேற்க வேண்டும். ஜனா­தி­பதி ஆணைக்­குழு கீழுள்ள பொறுப்­புகள் என்­னு­டை­ய­வை­யாகும், ஆனால் அதற்கு முன்­ன­ரான செயற்­பா­டுகள் அனைத்­தையும் உரிய அமைச்­சர்கள் கையா­ள­வேண்டும். இவற்­றிற்கு பொறுப்­பான அமைச்­சுக்கள் அனைத்­துமே ஐக்­கிய தேசிய கட்­சி­யி­டமே  உள்­ளன. நல்­லாட்­சியில் இரண்டு கட்­சி­களும் அமைச்­சுக்­களை பகிர்ந்­துள்­ளன. இதில் ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்­சுக்­களில் நாம் தலை­யி­டவோ எமது அமை­சுக்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­யி­டவோ கூடாது என்ற புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில்  நாம் செயற்­பட்டு வரு­கின்றாம். ஆகவே உரிய அமைச்­சர்கள் கையா­ள­வேண்டும். 

கேள்வி:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரா குற்றவாளிகளை தண்டிப்பதில் பின்னின்று வருகின்றனர்?

பதில் :- ஆம், ஐக்கிய தேசியக் கட்சியே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். குற்றவாளிகளை தண்டிப்பதில் அவர்களே பின்வாங்கி வருகின்றனர். மஹிந்த அணியினரை அவர்கள் தான் காப்பாற்றிவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. Ivaru nallavarnuuuuu.....Pacha paal kudi babyyyynu solraaru...!!!

    ReplyDelete

Powered by Blogger.